என்னை ஒதுங்கியிருக்க யாரும் நிர்பந்திக்கவில்லை, நானே ஒதுங்கினேன் – சசிகலா

சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என சசிகலா தெரிவித்தாக தகவல். தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என அதிமுகவில் இருந்து ஒதுங்கிய சசிகலா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் என்னையே வேண்டாம் என்றதால் நானே ஒதுங்கினேன் எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதிமுகவினர் ஒன்றாக இருந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து இருந்தால் … Read more

#Breaking:அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு – சசிகலா திட்டவட்டம்..!

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.மேலும்,துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா,நான்காண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்,அதிமுக நிர்வாகிகள் சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரை நீக்க வேண்டும்…! பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்…!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் தலைமையில், அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக-வின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் நீக்கப்படவேண்டும், அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுக-வில் இருந்து  நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை” – சசிகலா..!

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா அவர்கள்,கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடேயே தொலைபேசி மூலமாக பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது,தான் மீண்டும் கட்சிக்கு வருவதாகவும்,அம்மா ஜெயலலிதா போல ஆட்சியை நடத்துவதாகவும் தெரவித்தார். ஆனால்,இதற்கு அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.இதனையடுத்து,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் “சசிகலா அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை”,என்று கூறினார். … Read more

“எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை கூறியுள்ளேன்” – சசிகலா..!

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தான் அலோசனை கூறியுள்ளதாக சசிகலா பேசும் மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது. பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா அவர்கள்,கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடேயே தொலைபேசி மூலமாக பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது,தான் மீண்டும் கட்சிக்கு வருவதாகவும்,அம்மா ஜெயலலிதா போல ஆட்சியை நடத்துவதாகவும் தெரவித்தார். ஆனால்,இதற்கு அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.இதனையடுத்து,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி … Read more

சசிகலா உட்பட 500 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் சசிகலா உட்பட 500 பேர் மீது ரோசனை காவல்துறையினர் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கருவாடு மீன் ஆகலாம் ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுகவின் உறுப்பினர் ஆக முடியாது என சசிகலா குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து,சசிகலா ஆதரவாளர்கள் சுமார் 500 பேர்,தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சி.வி.சண்முகம் அவர்கள் திண்டிவனம் அருகேயுள்ள … Read more

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை போல் ஆட்சியை வழி நடத்துவேன் – சசிகலா!

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை போலவே நானும் ஆட்சியை வழிநடத்துவேன் என சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.  கடந்த சில நாட்களாகவே சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்பொழுதும் தேனியை சேர்ந்த அதிமுக நிர்வாகி கர்ணன் என்பவருடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதில், ஜெயலலிதாவை அவரது தாயை விட அதிக நாட்கள் நான் பராமரித்தது எனது பாக்கியம் என கூறிய சசிகலா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் … Read more

“அதிமுகவை காப்பாற்ற வாருங்கள்”- சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டர்கள் …!

அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற வாருங்கள் என்று சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின்பு சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால்,கடந்த சில மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடையே “நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதனையடுத்து,சசிகலாவுடன் பேசியதனால்,கட்சியின் விதிமுறைகளை மீறியதாக,அதிமுகவினர் சிலரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி … Read more

ஒரு சிலர் சுயநலமாக எடுத்த முடிவுகளால் தான் ஆட்சியை இழந்து நிற்கிறோம் – சசிகலா

ஒரு சிலர் சுயநலமாக எடுத்த முடிவுகளால் இன்றைக்கு ஆட்சியை இழந்து நிற்கிறோம் என சசிகலா சங்கரன் கோவிலை சேர்ந்த அதிமுக நிர்வாகி பூசுதுறை என்பவரிடம் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாகவே சசிகலா அவர்கள் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் அதிமுக நிர்வாகிகள் 3 பேருடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வகையில் சங்கரன் கோவிலை சேர்ந்த அதிமுக நிர்வாகி பூசுதுரை என்பவருடன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் … Read more

#BREAKING: சசிகலாவுக்கு எதிராக ஈபிஎஸ் , சி.வி சண்முகம் கூட்டத்தில் தீர்மானம்..!

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கடந்த சில நாட்களாக சசிகலாவை அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்களும் தொடர்ந்து தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகி வருகிறது. சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வருவதால் அதிமுகவில் குழப்பமும் ஏற்படும் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் … Read more