புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.!

puducherry Pongal Gift

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.500 ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.250 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது. பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..! இந்த … Read more

இன்று புதுச்சேரி விடுதலை தினம்! இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு..கொடியேற்றி வைத்தபின் முதல்வர் அறிவிப்பு!

PuducherryLiberationDay

புதுச்சேரியில் இன்று விடுதலை நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நீண்ட ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. கடந்த 1673ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு … Read more

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது – உள்துறை அமைச்சகம் கடிதம்!

puducherry

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்து, யூனியன் பிரதேச அந்தஸ்தே தொடரும் என முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தனையடுத்து, சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து தற்போதுள்ள நிலையே தொடரும் என முதலவர் ரங்கசாமிக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

#BREAKING : புதுச்சேரியில் குடும்பத்திற்கு ரூ.5,000 அறிவிப்பு..!

புதுச்சேரியில் மழை பாதிப்பு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படு்ம் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு மழை நிவாரணத்துக்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி ரூபாயை கோரியுள்ளது. பாகூர், சேலியமேடு, அரங்கனூர் மணவெளி தொகுதிகளில் மழையால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், 7000 … Read more

இன்று முதல் இதய அறுவை சிகிச்சை மீண்டும் தொடக்கம்., முதல்வர் ரங்கசாமி ..!

இதய அறுவை சிகிச்சை இன்று முதல் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்படுகிறது என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து இதய அறுவை சிகிச்சை துவங்கப்பட்டது. தற்போது வரை 234 இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத்தொடங்கிய கொரோனா காரணமாக இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா … Read more

#BREAKING: புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு..!

புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் சுயேட்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், யார் தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும் … Read more

#BREAKING: புதுச்சேரியில் முதல்வர் யார்..? புதிய குழப்பம்..!

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்  புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக மற்றும் சுயேட்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் ஆட்சியமைக்க  16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி … Read more

#ELECTIONBREAKING: என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக- அதிமுக -14 தொகுதியில் போட்டி.., ரங்கசாமி அறிவிப்பு ..!

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமையும் என சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் … Read more

அரசு சரியாக செயல்படவில்லை – என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியால் தங்களது எம்எல்ஏக்களை காப்பாற்ற முடியவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.சட்டப்பேரவையில்  முதல்வர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் கூறினார். இதன் பின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும்  தீர்மானம் இன்று படுதோல்வி அடைந்தது. நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் ஆட்சி செய்த காலங்களில் … Read more

அதிமுகவுடன் N.R காங்கிரஸ் ரங்கசாமி பேச்சுவார்த்தை….!!

அதிமுக தலைமையில் பிஜேபி + பாமக கூட்டணி முடிவாகி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிட N.R காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிமுக அலுவலகத்தில் பேச்சவார்த்தை நடத்தி வருகின்றார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + … Read more