#BREAKING: புதுச்சேரியில் முதல்வர் யார்..? புதிய குழப்பம்..!

தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் 

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக மற்றும் சுயேட்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் ஆட்சியமைக்க  16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் புதிய அரசில் பாஜக இடம்பெறும் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.

இவர்கள் கூட்டணியில் தொடங்கும்போது ரங்கசாமி தரப்பில் நான்தான் முதல்வர் என கூறி வந்தார். ஆனால், பாஜக தரப்பில் தேர்வு செய்ய தொடக்கூடிய எம்எல்ஏக்கள் தான் முடிவு செய்வார்கள் என ஆரம்பத்தில் இருந்து பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி தலைமையில் தான் ஆட்சி அமையுள்ளது. இதுவரை முதல்வர் யார் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

author avatar
murugan