#Alert:கொரோனா இன்னும் குறையவில்லை;மீண்டும் பரவும் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை,மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்றும்,கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை, மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி கூறுகையில்:”கொரோனா வைரஸ் நம்மை … Read more

ஒரு நாள் பயணம்…இன்று இமாச்சல பிரதேசத்திற்கு செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி,இன்று இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,இன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.அதன்பின்னர்,இன்று இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். குறிப்பாக,11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.இதற்கிடையில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார் … Read more

பிரதமர் மோடி நாளை இமாச்சல பிரதேசம் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி,நாளை இமாச்சல பிரதேச மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,நாளை இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,நாளை இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். மேலும்,11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.இதனைத் தொடர்ந்து,இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக,சுமார் 30 ஆண்டுகளாக … Read more

மக்கள் நிம்மதியாக உறங்க காரணம் ராணுவ வீரர்கள் தான் – பிரதமர் புகழாரம்!

மக்கள் நிம்மதியாக உறங்க காரணம் ராணுவ வீரர்கள் தான் என பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியுள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது தீபாவளி கொண்டாட்டத்தை காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், ஒவ்வொரு தீபாவளியின் போது நமது எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன். … Read more

பிரதமர் மோடி, குடியரசு தலைவரை சந்தித்ததில் மகிழ்ச்சி – நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின்பு நடிகர் ரஜினிகாந்த் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் நேற்று நடைப்பெற்று 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில், இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் … Read more

ஆப்கானிஸ்தான் சூழல் அண்டை நாடுகளை பாதிக்கும் – பிரதமர் மோடி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு என பிரதமர் மோடி பேச்சு. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) (Shanghai Cooperation Organization) 21வது கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பிரதிபலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். நிச்சயமற்ற நிலை மற்றும் அடிப்படைவாதம் ஆப்கானிஸ்தானில் நீடித்தால் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதாக அது அமைந்துவிடும் என்றும் அடிப்படைவாத … Read more

குவாட் உச்சி மாநாடு – செப்.22 ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அமரிக்கா சென்றால், அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதல் முறையாக இருவரும் நேரடியாகச் சந்திப்பார்கள் என எதிர்பார்ப்பு. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, 23ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து உள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் விவகாரம், சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக … Read more

#Breaking:பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம்,காணொலி மூலம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.இருப்பினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் டெல்லியில்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு,மத்திய அமைச்சரவைக் கூட்டமானது காணொலி மூலம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை … Read more

இந்தியாவுக்கு 25 மில்லியன் டோஸ் தடுப்பூசி;அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,பிரதமருடன் பேச்சு…!

அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,இந்தியாவுக்கு 25 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால்,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில்,உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு … Read more

“ஆய்வுக் கூட்டத்தை வேண்டுமென்றே மம்தா புறக்கணித்தார்” – மத்திய அரசு விளக்கம்..!

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை,மம்தா பானர்ஜி வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று மத்திய அரசு ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. கடந்த வாரத்தில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி முற்றிலும் தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தா வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது,பிரதமரின் அனுமதி பெற்றே,ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டதாக மம்தா தெரிவித்ததற்கு,பிரதமரிடம் அவர்,எந்த அனுமதியும் பெறவில்லை என்று … Read more