குவாட் உச்சி மாநாடு – செப்.22 ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அமரிக்கா சென்றால், அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதல் முறையாக இருவரும் நேரடியாகச் சந்திப்பார்கள் என எதிர்பார்ப்பு.

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22-ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, 23ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்தித்து உள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் விவகாரம், சீனாவுடனான எல்லை பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் பிரதமர் மோடி அங்கு குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2007-ல் ஜப்பானால் தொடங்கப்பட்ட, குவாட் மாநாடு என்பது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே ஒரு திட்டத்திற்கான உரையாடல் (strategic dialogue) என்பதாகும். வரும் 24ம் தேதி நடைபெற இருக்கும் குவாட் நாடுகளின் தலைவர்களின் முதல் தனிப்பட்ட உச்சிமாநாடு இதுவாகும்.

செப்.24-ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு புதிய சாலை பாதையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதில், பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோர் உச்சிமாநாட்டில் குவாட் செயல்பாட்டிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்க விரிவாக ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மார்ச் மாதத்தில் குவாட் மற்றும் ஜி7 கூட்டங்களில் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாகச் சந்தித்துள்ளனர். அமரிக்கா செல்ல இருக்கும் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் இருவரும் முதல் முறையாக நேரடியாகச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பிரதமர் மோடியின் வருகை மற்றும் இந்திய தரப்பில் இருந்து குவாட் உச்சி மாநாடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், செப்டம்பர் இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்க செல்லவிருந்ததாக கூறப்பட்ட நிலையில், பயணம் தற்போது உறுதியானதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 25-ஆம் தேதி நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடைசியாக 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில், அப்போது அதிபராக இருந்த ட்ரம்ப்புடன் சேர்ந்து பிரமதர் மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்