விமான பயணத்தின் போது நடுவானில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாய்

Flight: டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற விமானத்தில் 41 வயதான பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெபானி ஸ்மித் என்ற 41 வயதான பெண் அமெரிக்காவின் சார்லோட் நகருக்கு விமானத்தில் பயணம் செய்த போது நடுவானில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானமானது Turks and Caicos தீவில் உள்ள பிராவிடன்சியல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் ஸ்டெபானி ஸ்மித், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. … Read more

அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி..! இந்திய நடனக் கலைஞர் சுட்டுக்கொலை

USA: அமெரிக்காவில் இந்திய பரதநாட்டிய கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் இந்திய வம்சாவளியினரின் உயிரிழப்புகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேலும் ஓர் உயிரிழப்பு அரங்கேறியுள்ளது. இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். அமர்நாத் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படிப்பை படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், … Read more

அமெரிக்காவில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவன் பலி!

student in America

அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, 17 வயது மாணவன் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர்  காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 17 வயதான அந்த மாணவன், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காயமடைந்தவர்களில் நான்கு மாணவர்களும் ஒரு பள்ளி நிர்வாகியும் அடங்குவதாக அயோவா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஈரான் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை 103-ஆக உயர்வு..! பின்னர், அந்த … Read more

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

US Las Vegas - Nevada

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் … Read more

ஈரானின் ‘கலாச்சார காவல்துறை’ மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா.!

ஈரானில் ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்கும் ‘கலாச்சார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்ததுள்ளது. சமீபத்தில் செப் 15 ஆம் தேதி ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஹிஜாப் அணிவது குறித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் போராட்டடங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த … Read more

அமெரிக்காவில் முதல் முறையாக கொடிய பாக்டீரியா கண்டுபிடிப்பு!

தெற்கு மிசிசிப்பியின் வளைகுடா கடற்கரைப் பகுதியில், பர்கோல்டேரியா சூடோமல்லி என்ற கொடிய பாக்டீரியா கண்டுபிடிப்பு. அமெரிக்காவில் உள்ள நீர் மற்றும் மண் மாதிரிகளில் முதன்முறையாக ஒரு கொடிய பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதை கவனத்தில் கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மிசிசிப்பியின் வளைகுடா கடற்கரைப் பகுதியில், பர்கோல்டேரியா சூடோமல்லி (Burkholderia pseudomallei) என்ற … Read more

வருகின்ற ஜன.19 ஆம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

அமெரிக்கா:ஜனவரி 19 முதல் இலவச கொரோனா சோதனை கருவிகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கில் வேகமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,கடந்த ஒரே நாளில் 7,83,206 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,ஒரே நாளில் 2099 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும்,அமெரிக்க மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் 500 மில்லியன் இலவச கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் டெஸ்ட் கிட் வழங்கப்படும் என்றும்,இதனை … Read more

ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளேன் – எலான் மஸ்க் ட்வீட்!

சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், … Read more

அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியடைந்த தெற்கு ஆசியா எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் பங்கேற்று உள்ளார். அதில் பேசிய பிரதமர், பனிப்போர் நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடுகள் குழுக்களாக … Read more

அமெரிக்கா : முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு …!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவாகிய ஓமைக்ரான் எனும் வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆப்பிரிக்க நாடான கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாக உள்ளதாகவும், … Read more