“ஆய்வுக் கூட்டத்தை வேண்டுமென்றே மம்தா புறக்கணித்தார்” – மத்திய அரசு விளக்கம்..!

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை,மம்தா பானர்ஜி வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று மத்திய அரசு ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

கடந்த வாரத்தில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி முற்றிலும் தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தா வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • அதாவது,பிரதமரின் அனுமதி பெற்றே,ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டதாக மம்தா தெரிவித்ததற்கு,பிரதமரிடம் அவர்,எந்த அனுமதியும் பெறவில்லை என்று ,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • பிரதமரின் வருகை குறித்து தனக்கு தாமதமாக தகவல் அளிக்கப்பட்டது என்று மம்தா கூறியதற்கு பதிலளித்த மத்திய அரசு,புயல் வந்த பின்புதான்,அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முடியும் என்று கூறியது.
  • பிரதமரின் மறுஆய்வில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜி முன்னதாக ஒப்புக் கொண்ட போதிலும்,தனது முன்னாள் உதவியாளராக இருந்து  பாஜக எம்எல்ஏ ஆக மாறிய சுவேண்டு ஆதிகாரி,மாநில எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் இந்த கூட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பார் என்பதை அறிந்த பின்னர்,மம்தா தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்,என்று அரசு தெரிவித்தது.
  • பிரதமரின் வருகைக்காக விமான நிலையத்தில் தன்னை காக்க வைத்ததாக மம்தா கூறியதற்கு,விமான நிலையத்துக்கு பிரதமர்,மதியம் 1:59 மணிக்கு வந்தார் என்றும்,ஆனால், மம்தா மதியம் 2:10 மணிக்குதான் வந்தார். இதை திரிணமுல் எம்.பி. சமூக வலைதளத்தில்
    பதிவிட்டுள்ளார் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  • பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக தனது ஹெலிகாப்டர், வானில், 20 நிமிடங்கள் சுற்றி வர நேர்ந்தது என்று மம்தா கூறினார்.அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, பிரதமரின் பயணம் திட்டமிட்ட நேரப்படி அமைந்தது.மற்றவர்கள் முன்னதாக வந்தபோது, முதல்வர் ஏன் முன்னதாகவே வரவில்லை?,என்ற கேள்வி எழுப்பியது.
  • மேலும்,மம்தா,அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனேயே, தலைமைச் செயலரை மத்திய அரசு பணிக்கு திருப்பி அழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கூறினார்.அதற்கு,தலைமைச் செயலர் ஒரு இந்திய சேவை அதிகாரி.ஆனால்,அவர்  புயல் பாதிப்பு குறித்து பிரதமருக்கு அவர் விளக்கத் தவறிவிட்டார். மேற்கு வங்க உயரதிகாரிகள் இல்லாததால், ஆய்வு கூட்டம் ரத்து செய்ய வேண்டியதாயிற்று.அதனால் தான், அவரை திரும்ப அழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இவ்வாறு மம்தாவின் கருத்துகளுக்கு,மத்திய அரசு விளக்கம் அளித்து,மம்தா வேண்டுமென்று புறக்கணித்தார் என்றும் தெரிவித்துள்ளது.