பரபரப்பு.! இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கி சண்டை.!

எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். 21 வயது இளம் ராணுவவீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார். இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த … Read more

தொடர்ந்து பெய்து வரும் மழையால் போட்டி ரத்து .! ஒரு இன்னிங்க்ஸ் கூட விளையாடலா வீரர்கள் புலம்பல்.!

இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது. 3-ம் நாள் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. பிறகு போட்டி 5.2 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றது.இன்று 4-வது நாள் ஆட்டம்  தொடர் மழையால்  நிறுத்தப்பட்டது. இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததது. இந்நிலையில் இலங்கை அணி 2-வது … Read more

பாகிஸ்தானில் அதிக தேடப்பட்ட பட்டியலியல் அபிநந்தன் , சாரா அலிகான் .!

கூகுள் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள்  கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனையும் , பாலிவுட் நடிகை சாரா அலிகானையும்  பற்றிய தகவலை தேடியுள்ளனர். இந்தியாவில்  புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது  விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். இதில்  விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் … Read more

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 பேர் ஊடுருவல் முயற்சி.! மத்திய அரசு தகவல்..!

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 பேர் ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரின் விழிப்பான நடவடிக்கையால் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு & காஷ்மீரில் மொத்தமாக 22,557 தீவிரவாதிகள், … Read more

வரலாற்றில் இன்று..! டிசம்பர்-04 கடற்படையினர் தினம்..!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஒன்று நடைபெற்றது. அதாவது கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு முன்பு அந்த போரில் இந்திய கடற்படை டிசம்பர் நான்காம் தேதி அன்று பாகிஸ்தானின் உள்ள கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினர். இந்த தாக்குதலில் பி.என்.எஸ் முஹபிஸ் மற்றும் பி.என்.எஸ் கைபர் கப்பல்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்தன. மேலும் இந்திய … Read more

இந்தியா -பாக் தபால் சேவை மீண்டும் தொடக்கம்..! பார்சல் தடை-பாகிஸ்தான் அறிவிப்பு ..!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து என மத்தியஅரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்து கொள்வதாக அறிவித்தது. மேலும் தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைத்து கொண்டு இந்திய தூதரை திரும்ப அனுப்பியது.இந்தியா -பாகிஸ்தான் இடையே இயங்கி வந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியாவுடனான தபால் சேவையும் நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் அக்டோபர் மாதம் அறிவித்தது.இதனால் மத்திய … Read more

ஆஸ்திரேலியா & பாகிஸ்தான் சாதனையை சமன் செய்த இந்திய அணி..!

இந்தியா,பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இப்போட்டி இந்தூரில் நடைபெற்றது.முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சால் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம்  இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய &பாகிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்து உள்ளது. இந்திய அணி இந்த வருடம் தென் ஆப்ரிக்க அணிக்கு … Read more

தக்காளி பண்ணையை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்கள்! அண்டை நாட்டில் நிலவரம் என்ன?

நம்மூரில் தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், நம் நாட்டின் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி வைத்து கூடாது எனவும் பல்வேறு விதிமுறைகளை விதித்து விலைவாசியை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது இதே நிலைமை அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. அங்கு தக்காளி விலை மிகவும் அதிகமாக விலை ஏறியுள்ளது. அங்கு விளைச்சல் … Read more

பாகிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிநந்தனின் சிலையும்! காபி குடித்த குவளையும்!

இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தினார் அப்போது அவர் சென்ற விமானம் தீப்பிடித்துவிட உடனே பாராசூட் மூலம் தப்பித்தார். ஆனால் அவர் பாராசூட்டில் விழுந்த இடம் பாகிஸ்தான் ஆகும். அதனால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, விசாரணை செய்தது. ஆனால் அபிநந்தன் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தனுக்கு காபி கொடுக்கப்பட்டு உபரசிக்கப்பட்டது. பின்னர், இருநாடுகளுக்கு இடையேயான … Read more

ஓடும் ரயிலில் உணவு சமைத்த பயணி.. சிலிண்டர் வெடித்து 65 பேர் பலி..!!

பாகிஸ்தானில் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது ரயிலில் பயணித்த பயனர்கள் காலை உணவு சமைக்க ஒரு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்துள்ளது. காற்றின் வேகத்தால் மற்ற பெட்டி முழுவதும் தீ பரவியதால் பயனர்கள் அலறி அடித்து ஓடிய சிலர் தீ-லிருந்து இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து உள்ளார்கள். இந்த விபத்தில் மொத்தம் 65 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான … Read more