தொடர்ந்து பெய்து வரும் மழையால் போட்டி ரத்து .! ஒரு இன்னிங்க்ஸ் கூட விளையாடலா வீரர்கள் புலம்பல்.!

  • இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 11-ம் தேதி தொடங்கியது.
  • 3-ம் நாள் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. பிறகு போட்டி 5.2 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றது.இன்று 4-வது நாள் ஆட்டம்  தொடர் மழையால்  நிறுத்தப்பட்டது.

இலங்கை ,பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்ததது.

இந்நிலையில் இலங்கை அணி 2-வது நாள் பேட்டிங் செய்துகொண்டு இருக்கும்போது மழை பெய்ததால் 2-ம்  நாள் முடிவில் இலங்கை 6 விக்கெட்டை இழந்து 263 ரன்கள்எடுத்தனர். இதை தொடர்ந்து  3-ம்  நாள் ஆட்டமும் வானிலை காரணமாக பாதிக்கப்பட்டது. 2-ம்  நாள் இரவில் பெய்த பலத்த கன மழை காரணமாக மைதானம்  ஈரப்பதமாக இருந்தது.

இதனால் 3-ம்  நாள் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய  5.2 ஓவர்கள் மட்டுமே விளையாடினர்.பின்னர் மேகம் கருப்பாக காணப்பட்டதால் விளையாட போதிய வெளிச்சம் இல்லாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில்  3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டை இழந்து  282 ரன்கள்எடுத்து இருந்தனர். களத்தில் தனஞ்ஜெயா டி சில்வா 87 , தில்ருவான் பெரேரா 6 ரன்களுடனும் விக்கெட்டை  இழக்காமல் இருந்தனர்.இன்று 4-வது நாள் ஆட்டம்  தொடங்க இருந்தது. ஆனால் அங்கு பெய்துவரும் தொடர் மழையால் இன்றைய போட்டியும் நிறுத்தப்பட்டது.

author avatar
murugan