இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 பேர் ஊடுருவல் முயற்சி.! மத்திய அரசு தகவல்..!

  • கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 பேர் ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
  • பாதுகாப்புப் படையினரின் விழிப்பான நடவடிக்கையால் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 84 ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஜம்மு & காஷ்மீரில் மொத்தமாக 22,557 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் 31-ம் தேதி வரை மட்டும் 1011 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்புப் படையினரின் விழிப்பான நடவடிக்கையால், 2,253 தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், 42 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை மக்களவை கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஸ்ரீதர் கோத்தகிரி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்