பாகிஸ்தானில் அதிக தேடப்பட்ட பட்டியலியல் அபிநந்தன் , சாரா அலிகான் .!

  • கூகுள் நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
  • அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள்  கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனையும் , பாலிவுட் நடிகை சாரா அலிகானையும்  பற்றிய தகவலை தேடியுள்ளனர்.

இந்தியாவில்  புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானம் நுழைந்த போது  விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார்.

இதில்  விங் கமாண்டர் அபிநந்தன் விமானமும் சுடப்பட்டது.ஆனால் பாராசூட் மூலம் அபிநந்தன் துரதிருஷ்டவசமாக தப்பித்தது  பாகிஸ்தான் வசம் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்திய நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பாகிஸ்தான் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம்ஒப்படைத்தனர்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கூகுள் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டு உள்ளது.அதில் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக கூகுளில் விங் கமாண்டர் அபிநந்தனை பற்றிய தகவலை தேடியுள்ளனர்.மேலும் பாலிவுட் நடிகை சாரா அலிகானையும் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அதிகமாக தேடி படித்து உள்ளனர்.

author avatar
murugan