ஒரே நாளில் 3 பேருக்கு பாரத ரத்னா விருது – பிரதமர் மோடி அறிவிப்பு

Bharat Ratna award

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், … Read more

கோவில் கட்டினால் ஓட்டு போடுவார்களா? ராமர் கோவில் குறித்து மெளனம் கலைத்த எடப்பாடி பழனிச்சாமி

கோவில் கட்டினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா என்று ராமர் கோவில் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது இவ்வாறு கூறினார். அப்போது, “ திமுகவின் இளைஞரணி மாநாட்டில் ஒரு தீர்மானம் கூட மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை; நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் வாக்குறுதி நாடகம். வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சரியான கூட்டணியை … Read more

கிரிக்கெட் ரசிகராக மாறிய பிரதமர் மோடி… உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண நான் ரெடி.!

PM MODI

2023 ஐசிசி 13வது  உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்களின் ஆரவரத்துக்கு மத்தியில் தொடங்கியது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று 45 லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி … Read more

வளர்ந்த இந்தியாவில் 4 முக்கிய தூண்கள்… பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இலக்கு – பிரதமர் மோடி பேச்சு

Narendra Modi

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் சென்றார். பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிகட்டு கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தய பிரதமர் மோடி, பழங்குடியின வளர்ச்சிக்கான, விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, பிரதமரின்  விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 15-ஆவது தவணை தொகையை விடுவித்தார். 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18,000 … Read more

விவசாயிகளுக்கான நிதியுதவியை இன்று விடுவிக்கிறார் பிரதமர்!

farmers Financial

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் … Read more

சத்தீஸ்கரில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா – பிரதமர் மோடி ட்வீட்

PM Modi in MP

இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் மிசோரத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  சத்தீஸ்கரில் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது காலை 8 மணிக்கு மேலும் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சதீஷ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க  உள்ளன. சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள … Read more

ஆளுநரின் இந்த நடவடிக்கை என்பது அநாகரிகத்தின் உச்சம் – சு.வெங்கடேசன் எம்.பி

suvenkadesan

சங்கரய்யாவிற்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வழுத்து நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more

‘எதிர்கால தலைமுறையினருக்கான கலங்கரை’! முத்துராமலிங்கத் தேவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி!

pm modi and MuthuramalingaThevar

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவானது, இன்று பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தனது மரியாதையை இன்று காலை செலுத்தினார். அதைப்போலவே அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் வந்து மரியாதை செலுத்தினார். மற்றும்  தமிழக பாஜக … Read more

இன்று 7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Modi

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று மகாராஷ்டிரா செல்லும் அவர், 86 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ‘நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம், 86 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் அவர், புதிய … Read more

37 வது தேசிய விளையாட்டுப் போட்டி..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

PMModiNDA MeetDelhi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 26ம் தேதி) மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு செல்கிறார். பிற்பகல் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார். பிறகு ஷீரடியில் உள்ள புதிய தரிசன வரிசை வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த புதிய தரிசன வரிசை வளாகத்திற்கு கடந்த 2018 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த தரிசன வரிசை வளாகம் பக்தர்களுக்கு … Read more