விவசாயிகளுக்கான நிதியுதவியை இன்று விடுவிக்கிறார் பிரதமர்!

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை’ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

14-ஆவது தவணையான ரூ.17,000 கோடியை கடந்த ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி விடுவித்து, 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்தனா். இந்த நிலையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-ஆவது தவணை தொகையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவிக்கிறார். 8 கோடிக்கு மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பழங்குடி பெருமை நாளையொட்டி ஜார்கண்ட் பரப்புரை கூட்டத்தில் 15-ஆவது தவணை தொகை விடுவிக்கப்பட உள்ளது. சமூக போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடி பெருமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகளுக்கான நிதியுதவி தொகை விடுவிக்கப்பட உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்