Thursday, November 30, 2023
Homeஇந்தியாஇன்று 7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

இன்று 7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

இன்று மகாராஷ்டிரா செல்லும் அவர், 86 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ‘நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம், 86 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் அவர், புதிய தரிசன வளாகத்தையும் திறந்துவைக்கிறார். பின்னர் 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க கோவாவுக்குச் செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையின்படி, பிரதமர் மோடி முதலில் மகாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடிக்கு இன்று மதியம் 1 மணியளவில் செல்வார். அங்கு ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் தரிசனம் செய்வார், அங்கு அவர் பூஜை செய்து புதிய வளாகத்தை திறந்து வைப்பார். இந்த வளாகத்தின் அடிக்கல்லை 2018 அக்டோபரில் பிரதமர் நாட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரக்கும் தெலுங்கானா அரசியல் களம்.! நேரலையில் தாக்கி கொண்ட பிஆர்எஸ் – பாஜக வேட்பாளர்கள்.!

இதனையடுத்து, பிற்பகல் 3.15 மணிக்கு ஷீரடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.