ஜெயலலிதா இருந்தால் இரும்புக்கரம் கொண்டு தடுத்திருப்பார் -வைகோ

  கோவில்பட்டியில் மதிமுக கட்சி நிர்வாகி ஒருவர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார், தொடர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் உள்ளது. தமிழகத்தில் மதசார்பின்மையை சிதைக்கும் வகையிலும், சீர்குலைக்கும் வகையிலும் சதி நோக்கத்தோடு, ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில், வடநாட்டில் தொடங்கி இங்கு வந்துள்ளனர். இதற்கு முழுபாதுகாப்பு தமிழக அரசு கொடுக்கிறது.அண்ணா திமுக என்ற அண்ணா பெயரை சொல்ல … Read more

கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும்….அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் ஆகிறது …

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அரசியலுக்கு வந்து ஐந்து நாட்களே ஆன கமல்ஹாசன் அடக்கி வாசிக்க வேண்டும் என்று  காட்டமாக தெரிவித்துள்ளார். கமல் அரசியலுக்கு வந்தே 5, 6 நாட்கள் தான் ஆகிறது  என்றும் நடிகர் கமல் அடக்கி வாசிக்க வேண்டும் கூறினார். நடிகர் கமல் எங்களுக்கு அறிவுரைகள் சொல்ல வேண்டாம் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அரசியலில் கத்துக்குட்டி எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அரசியலுக்கு புதிதாக வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார். பெரியார் சிலை குறித்த ஹெச்.ராஜா பதிவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகியோர் வீணாக தங்கள் பேச்சாற்றலை விழலுக்கு இரைக்க வேண்டாம் என கூறியிருந்தார். இது தொடர்பாக கருத்துக் கூறிய வைகோ, அரசியலுக்கு வந்து ஐந்தாறு நாட்களாகும் கமல்ஹாசன் தங்களுக்கு … Read more

சென்னை ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு வைகோ கண்டனம்…!!

சென்னை உள்ள மத்திய அரசின் ஐஐடி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல், சமஸ்கிருத பாடல் பாடியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த போது சமஸ்கிருதத்தில் பாடல் பாட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன்.ராதாகிருஷ்ணனும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

காஞ்சி கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்ட பிணக்குவியலுக்கு வைகோ கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர். அவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் … Read more

திமுகவுடன் களம் இறங்கப்போகும் மதிமுக!

ம.தி.மு.க.  கட்சியின்  பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதைத் தமிழக அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகச் சீர்கேடுகள், போக்குவரத்துத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் ஆகியவற்றால்தான் போக்குவரத்துக் கழகங்கள் நட்டம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளதாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 78 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் … Read more

வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம்!

வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக ம.தி.மு.க கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வைகோவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 2017 ஜூன் 9ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறித்துப் பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளது. இது குறித்துக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மலேசிய உள்துறை அமைச்சகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வெளியுறவு … Read more

திமுக பல சோதனைகளை கடந்த இயக்கம்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல்…!

ஆர்.கே. நகர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அண்ணா தி.மு.க. தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்தும் பாய்ந்த பண வெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கி விட்டது. எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

ஆர்கே.நகர் தேர்தல் முடிவுகள்: மதிமுக தலைவர் வைகோவை கலாய்த்த நடிகை கஸ்தூரி…!

இன்று இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி மதிமுக தலைவர் வைகோ என தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து கீழே உள்ள பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி… கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததில் இருந்து இவரை மீம்ஸ் போட்டு ஒட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்,இதனை தொடர்ந்து அவர் இந்த ஆர்கே.நகர் இடைதேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்… ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் திமுகவை பயங்கர தோல்வியை நோக்கி இழுத்து செல்கிறது … Read more