“வாரிசு அடிப்படையில் வந்த முக.ஸ்டாலின் என்ன செய்தார்” அமைச்சர் விளாசல்..!!

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு என்ன செய்தார்? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினர்…   கோவை முதல்வர், துணை முதல்வருக்கு துணையாக இருப்பதால் எங்கள் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அவர் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவை  பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி … Read more

‘ஆட்டம் காணும் ஸ்டாலின்’ “அச்சத்தில் திமுக” தேர்தல் நடக்க கூடாது…!!

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் கருணாநிதி, அழகிரி என அனைவரும் இருந்தபோதே, தி.மு.க டெபாசிட்டை இழந்தது. முக ஸ்டாலினின் புதிய தலைமை அண்ணா அறிவாலயத்தில் தீவிர விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது வருகின்ற இடை தேர்தல்கள்.திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் திமுக_ வை எடைபோடும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முக.ஸ்டாலின் இடைத்தேர்தல்களை விருப்பம் மாநிலம் முழுமைக்கான பொது தேர்தலை எதிர்கொள்ள விரும்புகிறார். அதற்க்கு முனக உள்ளாட்சித் தேர்தலை முதலில் எதிர்கொள்ளும் முடிவில் இருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் சொல்லுகின்றனர். முக.ஸ்டாலின் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசியல்ரீதியான … Read more

அடுத்த கட்டத்தை நோக்கி முக. ஸ்டாலினின் நகர்வு..!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் கூறுகையில், வரும் 8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.கட்சியின் ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திமுக தலைவராக முக. ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் … Read more

அத்தைக்கு மீசையும் முளைக்காது..!! மாமானு அழைக்க முடியாது..!! ஓ.எஸ்.மணியன்..!!

காவிரி விவகாரத்தில் பிரதமரை சந்திக்க முதலமைச்சரையும் அழைத்துச் செல்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைக்காது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார். நாகை அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தங்குமிடத்தை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

அண்ணா தொழிற்சங்கங்கள் மூலம் பேருந்து இயக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களின் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கம் மூலம் ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வைத்து பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதனை எதிர்த்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘அண்ணா தொழிற்சங்கம் மூலம் பேருந்துகளை இயக்க முடிவு செய்தால், நெருப்புக்குள் கைவிட்ட குழந்தையின் நிலை தான் ஏற்படும்’ என்று போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். source : dinasuvadu.com

புத்தாண்டை முன்னிட்டு கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து பெற்றனர்!

புத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நண்பகலில்கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாளுடன் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். source: dinasuvadu.com

பெரும்பான்மை இல்லாத அரசு பாஜகவால் இயங்குகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக செயல்தலைவரும், எதிகட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் அளித்த பெட்டியில், பெரும்பான்மை இல்லாத அரசு தமிழக விவசாயிகளை கவனிக்க வில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘பெரும்பான்மை இல்லாத அரசானது, மத்திய பாஜக அரசால் இயங்குகிறது. தமிழக விவசாயிகலின் போராட்டங்களை பற்றி கவலையில்லாமல் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறது. இப்படியே போனால் தமிழக விவசாயிகளின் நிலைமை கேவிகுறியாக போகும்’ என குற்றம் சாட்டினார். source : dinasuvadu.com

மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் : வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் இன்று தீரர்ப்பு வெளியானது. இதில் குற்றவாளிகள் என குறிப்பிடபட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் நிரபராதி என கூறி இன்று தீர்ப்பு வெளியானது. இதுகுறித்து, பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானபடுத்தி அழிக்க போடப்பட்ட வழக்கு தான் 2ஜி. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்று கூறினார். … Read more

ஆர்கே நகர் இடைதேர்தலை நிறுத்த சதி : ஸ்டாலின் குற்றசாட்டு

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, ‘ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் வந்ததால் தேர்தல் ரத்தானது. ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதிவேலை நடக்க வாய்ப்புள்ளது. மேலும், ஆய்வு நடத்த ஆளுநருக்கு எந்த … Read more

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்

ஆர்.கே நகர் இடைதேர்தலில் திமுக சார்பில் மருதுகனேஷ் போட்டியிடுவார் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மருதுகனேசை நிற்க வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் பிறகு மருதுகணேஷ் ஆர்.கே நகர் இடைதேர்தல் வேட்பாளர்களாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.