எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு- சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு நீட்டித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்திய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்ய … Read more

வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் -தமிழக அரசு .!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். திமுக மற்றும் அறப்போர் இயக்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அதில், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகவும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்கியதாகவும் வழக்கு தொடரப்பட்டது. மேலும், எஸ்.பி வேலுமணி எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என … Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!

அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த அவமதிப்பு  வழக்கு தள்ளுபடி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க  ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வழக்கை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் … Read more

மதம் குறித்து கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி கொரோனா பாதித்தவர்கள் மொத்தம் 234 ஆக உயர்ந்தது.  இந்நிலையில் டெல்லியில் மாநாடு சென்று வந்தவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்ததை அடுத்து, சாதி, மத ரீதியிலான சில வந்தந்திகள் இணையத்தில் உலாவந்தன.  இதனை தடுக்கும் பொருட்டு, தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ‘ சாதி, மதம் என்னவென பார்த்து  கொரோனா வருவதில்லை. … Read more

கொரோனா தீவிரம்! 540 படுக்கைகள் தயார்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி!

தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களிடம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேட்டியளித்தார்.    அவர் பேசுகையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 540 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தனியார்  மருத்துவமனைகளிலும் 100 படுக்கைக்கு மேல் தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவும்,  தேவையான வெண்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  என்றும், தனியார் பொறியியல் கல்லூரியில் தனி கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கோவை வந்துள்ள … Read more

ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார்- அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ,சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ஆற்றுமணலுக்கான மதிப்பீடு கொடுத்துவிட்டு, M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தை ‘ஊழல் நிர்வாகமாக’ மாற்றியுள்ள அமைச்சரும் அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே … Read more

உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரெடி! விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக தள்ளிவைக்க வைக்கப்பட்டுள்ளன.  உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த  வருடத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முக்கிய தகவல் வெளியானது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தமிழக தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்டு … Read more

கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க கோரிக்கை-அமைச்சர் வேலுமணி

கோவையிலிருந்து டெல்லி மற்றும் துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார்.இதன் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மழைநீர் சேமிப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது .சென்னையில் உள்ள 210 ஏரிகள் மேம்படுத்தப்படும், கூடுதலாக 1 டிஎம்சி நீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை … Read more

தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது-வேலுமணி

சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,சென்னை மற்றும் தமிழகத்தில் இருக்கும் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளது. தெலுங்கு – கங்கை திட்டம் மூலம் ஆந்திராவில் இருந்து 8 டி.எம்.சி தண்ணீர் இன்னும் 25 நாட்களில் சென்னையை வந்தடையும் என்றும் தமிழகத்தில் குடிமாரமத்து … Read more

சென்னையின் குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும்-அமைச்சர் வேலுமணி

நேற்று  தமிழக அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும்  ஆந்திராவிற்கு  சென்றனர்.அங்கு முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து  கிருஷ்ணா நதிக்கு  தண்ணீர்  திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள். இதற்கு பின் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு தரவேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறந்துவிட ஆந்திர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் முலம் சென்னையின் குடிநீர் பற்றாக்குறை வேகமாக தீர்ந்துவிடும் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.