இன்று மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை தாக்கல் செய்கிறார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த சட்டமானது  குற்றவாளிகளை அடையாளம் காணுதல் அவர்கள் பற்றிய அடையாளம் மற்ற  தகவல்களை பாதுகாத்தல் போன்றவைகளை நோக்கமாக கொண்டுள்ளது.இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள் கைவிரல் பதிவுகள், உள்ளங்கை ரேகைகள் பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள் ஆகிவற்றை நீதிபதியின் உத்தரவு பின்னரே எடுக்க முடியும். ஆனால் இன்று தாக்கல் … Read more

#BUDGET2022:பொருளாதார ஆய்வறிக்கை – மக்களவையில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

டெல்லி:நாடாளுமன்ற மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.அப்போது,குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். குறிப்பாக,குடியரசு தலைவர் உரையின்போது கல்வி தொடர்பான பேசியபோது திருக்குறளை மேற்கோள்காட்டினார்.அதாவது, நாடாளுமன்ற கூட்டு கூட்டத் … Read more

சோனியா காந்தியை சந்திக்கும் பஞ்சாப் மக்களவை எம்.பி.க்கள்..!

பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சோனியா காந்தியை சந்திக்கிறார்.  இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சந்திக்கிறார். காங்கிரஸின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் பின்னர் பேசிய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி சீட்டு வழங்க முடிவு செய்தது. இன்றைய கூட்டத்தில் 117 … Read more

நீட் விலக்கு மசோதா – மக்களவையில் திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டீஸ்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் பற்றி விவாதிக்க திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டிஸ். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் உள்ளது தொடர்பாக மக்களவை அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர் பாலு அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

#Breaking:தேர்தல் சட்ட திருத்த மசோதா – மக்களவையில் தாக்கல்

தேர்தல் சட்ட திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில்,குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவும் ஒன்று.இதற்கு வ மத்திய அமைச்சரவை கடந்த வாரத்தில் … Read more

மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று தாக்கல்!

மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று அறிமுகம் செய்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ. இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு என அறிவிப்பு. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் முடங்கியது. இன்று காலை மக்களவை தொடங்கியதில் இருந்து லக்கிம்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், காலை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிற்பகல் கூட்டம் தொடங்கியபோது அவைத் தலைவரின் இருக்கையின் முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி … Read more

#Breaking:இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று … Read more

இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு …!

தொடர் அமளி காரணமாக இன்று காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று அதாவது நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான நேற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா குறித்து விவாதம் நடத்தி, அதன்பின் மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால் விவாதங்கள் நடத்தப்படாமல் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் … Read more

மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு..!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.  கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளில் ஈடுபட்டதால் சபாநாயகர் வெங்கையா நாயுடு மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார். மீண்டும் மக்களவை தொடங்கிய நிலையில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மாநிலங்களவையிலும் குரல் … Read more