மே 4 முதல் ஒரு நாளைக்கு 150 பேர் வீதம் இலவச பொருட்கள்.! – அமைச்சர் காமராஜ் தகவல்.!

மே மாதத்திற்கான விலையில்லா நியாய விலைக்கடைபொருட்கள் மே-4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசு ரேஷன் கடை பொருட்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்து ஏப்ரல் மாத பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்து, மே மாத ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. … Read more

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக  3,34,549 பேர் கைது, ரூ.3,33,34,714 அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக  3,34,549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த  3,34,549 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,16,404 வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. … Read more

மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி கடனுதவி.! ஆர்.பி.ஐ அறிவிப்பு!

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆர்பிஐ ரூ.50,000 கோடி கடனுதவியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால், தொழில் நிறுவனங்கள் பெருமளவு இயங்காமல் உள்ளன. பொதுமக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாததால் மாத தவணை தொகையை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசத்தை ஆர்பிஐ வழங்கியது (வங்கிகளின் விதிகளுக்குட்பட்டு). Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் பண்ட் திட்டங்களை முடக்கியதால் பல மியூச்சுவல் பண்ட் முதலீட்டார்கள் பாதிக்கும் சூழல் உருவானது. இதனை அடுத்து, மியூச்சுவல் … Read more

மாஸ்டர் மீது அதீத நம்பிக்கையில் தளபதி விஜய்.! எந்த வழியில் படம் வெளியாகவுள்ளது தெரியுமா?!

மினிமம் கியாரண்டி அல்லாமல், டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியாக உள்ள முதல் விஜய் படம் மாஸ்டர் தான். இந்த முடிவுக்கு விஜய் சம்மதித்தாகவும் கூறப்படுகிறது. தளபதி விஜய் நடிப்பில் இம்மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவிருந்த திரைப்படம் மாஸ்டர். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு அமலில் வந்து தமிழ் சினிமா, இந்திய சினிமா தாண்டி உலக சினிமாவை புரட்டி போட்டுவிட்டது. இதனால் இந்த லாக்டவுன் பிரச்சனைகள் எப்போது முடியும், திரையரங்கு எப்போது திறக்கப்படும், மக்கள் பயமின்றி திரைக்கு சகஜமாக வரப்போவது … Read more

சொத்து வரி, குடிநீர் கட்டணத்திற்கு 3 மாத கால அவகாசம்.! அரசாணை வெளியீடு.!

சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் பலரும் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மக்களின் நிலை அறிந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

எளிமையான திருமணம்.! ஆன்லைனில் ஆசீர்வதித்த உற்றார் உறவினர்கள்!

தஞ்சையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை ஜூம் ஆப் மூலம் இணையத்தில் இணைத்து அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். கொரோனா முன்னெச்செரிக்கையாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது மே மாதம் 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் என பலநிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சையில் இந்த ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை … Read more

ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைது ,ரூ. 3 ,27,33,714  அபராதம் விதிப்பு

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,24,269 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர் என்று  தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது  செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த  3,24,269 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை  3,06,339  வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. … Read more

தமன்னாவா இது? சகோதரனுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ள தமன்னா!

நடிகை தமன்னா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது சகோதரனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், தனது லாக் டவுன் நாட்களில் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   #Flashback to the days when we use to annoy the hell outta each … Read more

அரசு இதனை செய்து தர வேண்டும்- சிதம்பரம்

தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல … Read more

பதிவு செய்தால் போதும்,மீன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

பதிவு செய்தால் போதும்,மீன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகிக்கப்படும் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள்.எனேவ மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கும் வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை தெருக்களில் விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில் தான் சென்னையில் 5 இடங்களில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூலமாக வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதாவது ‘‘மீன்கள்’’ என்ற செயலி மூலமாக வீடுகளுக்கு விற்பனை செய்ய ஏற்பாடு … Read more