கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது. இதனால் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது. இதற்குஇடையில்  சென்னை … Read more

அரிசிக்கு பதில் பணம் : ஆளுநர் உத்தரவு செல்லும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என்று  பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த தீர்மான அறிக்கையுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை  சந்தித்தபோது, இதற்கு கிரண்பேடி  மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் … Read more

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது-கிரண்பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று  கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் தமிழகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது .ஓராண்டில் பெய்த மழை தண்ணீரை சேர்த்துவைத்ததால் மட்டுமே புதுச்சேரியில் தண்ணீர் பிரச்னை இல்லை. 3 ஆண்டுகளாக நீர்நிலைகளை பராமரிப்பதில் புதுச்சேரி அரசு கவனம் செலுத்தி வருகிறது .தமிழகத்தில் உள்ள எந்த … Read more

ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது.இதில்  எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதைக் குறிப்பிட்டு கிரண்பேடி ட்விட்டரில் கருத்து   வெளியிட்டிருந்தார்.எனவே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார் ஸ்டாலின்.இதனால் ஸ்டாலினின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார், சபாநாயகர்.இதனையடுத்து  ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு, அதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கிரண்பேடி நடவடிக்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்துகொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது  – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது  என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கிரண்பேடியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது. நிதி தொடர்பான முடிவுகளை அமல்படுத்த மட்டுமே உச்சநீதிமன்றம் … Read more

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய … Read more

ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது …! நிதியை முறைகேடாக செலவு செய்துள்ளது..!முதல்வர் பரபரப்பு தகவல்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஊழலுக்கு உடந்தையாக உள்ளது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அம்மாநில  முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.   அதேபோல் புதுச்சேரியில் அரசு சார்பில் கடந்த  அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விழா நடத்தப்பட்டது.அப்போது அந்த விழாவில் அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் ,புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பங்கேற்றார்.அப்போது விழா மேடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்  பேசியபோது இந்த அரசு குறித்து … Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு முழு ஆதரவு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள் சரியான பாதையில் செல்கின்றனர் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.