மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்…!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் , மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு, இன்று  அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோளின் படி அதிமுகவினர் இன்று மாலை 6 … Read more

#Breaking : ஜெயலலிதா நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!

செல்வி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை. அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் … Read more

இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினம்!

தமிழகத்தின்  மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 4-வது ஆண்டு நினைவு தினம். தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை . செல்வி ஜெயலலிதா அவர்கள், செப்டம்பர் மாதம், 22-ம் தேதி  இரவு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர் டிசம்பர் 5-ம் தேதி … Read more

ஜெயலலிதா நினைவு தினம் : நிமிர்ந்த நன்னடை…! நேர்கொண்ட பார்வை…! – சரத்குமார் ட்வீட்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்.’ ஜெயலலிதா குறித்து நடிகர் சரத்குமார் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு.  தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார்.  இன்று அவரது 4-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில், ஜெயலலிதா குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சரத்குமார் … Read more

எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி! ஈபிஎஸ் ட்விட்!

முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  முன்னாள் முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆவார்கள், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்-5ம் தேதி இவ்வுலாகை விட்டு மறைந்தார். இந்நிலையில், இன்று இவரது 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு … Read more

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினம்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அஞ்சலி!

செல்வி ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். தமிழகத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக 6-வது முறை முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, உலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு தற்போது பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முன்னாள் … Read more

இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் – கருப்பண்ணன்!

இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் ஆக முடியும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துவக்க விழாவும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தின் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமாகிய  கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியை ஏற்றிய பிறகு மேடையில் மக்களுக்கு உரையாற்றினார். … Read more

ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு விசாரணை தேதி வெளியீடு!

ஜெயலலிதா வரலாற்று தொடர்பான படங்களுக்கு எதிரான ஜெ.தீபாவின் வழக்கு இறுதி விசாரணை நவம்பர் 10,11 ஆகிய தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது தமிழ் மற்றும் பல்வேறு மொழிகளில் படமாக வெளிவர உள்ளது. தலைவி, குயின் ஆகிய படங்கள் தமிழில் வெளிவர உள்ளது. இந்நிலையில், இந்த படங்களை வெளியிடக் கூடாது, ஏனென்றால் அதில் தனது தந்தையை தவறாக சித்தரித்துள்ளனர் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா அவர்கள் வழக்கு … Read more

பரோலில் வீட்டுக்கு சென்ற பேரறிவாளன்! குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், 30 நாள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டிற்கு சென்ற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் காலத்தில் அவர் வெளியே செல்லவும், அறிமுகம் … Read more

நாளை நமதே! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை!

2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் நாளை நமதே என்ற வாசகங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.