இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 4-வது நினைவு தினம்!

தமிழகத்தின்  மிகப்பெரிய பெண் ஆளுமையான செல்வி ஜெயலலிதா அவர்களின் 4-வது ஆண்டு நினைவு தினம். தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை .

செல்வி ஜெயலலிதா அவர்கள், செப்டம்பர் மாதம், 22-ம் தேதி  இரவு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த  நிலையில், 75 நாட்கள் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர் டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரண செய்தி தமிழகத்தையே கண்ணீர் கடலில் மூழ்க செய்தது. அதிமுகவின் பொது செயலாளராக 6 முறை பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த பெண் ஆளுமையாக தான் செயல்பட்டார். எனவே தான் இவரை தமிழகமே ‘அம்மா’ என்று அழைக்கின்றது.

தான் திறமையான ஆளுமையாலும், தைரியமிக்க செயலாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்ட இரும்பு பெண்மணி ஜெயலலிதா அவர்கள், டிச.5ம் தேதி தனது உலக வாழ்வை முடித்துக் கொண்டார். அவரது உடல் மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அங்கு  பிரமாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜெயலலிதாதாவின் 4-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.