பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு..!

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றும் இன்னும் எந்த முடிவும் … Read more

சட்டம் தன் வாசலை திறந்த பின்பும் 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி – பேரறிவாளன் தாயார்!

சட்டம் தனது வாசலை திறந்த பின்பும் அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழுபேர் இத்தனை வருடங்களாகியும் விடுவிக்கப்படாதது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்பொழுது … Read more

பரோலில் வீட்டுக்கு சென்ற பேரறிவாளன்! குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வரவேற்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், 30 நாள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். சென்னை புழல் சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். வீட்டிற்கு சென்ற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாட்கள் பரோல் காலத்தில் அவர் வெளியே செல்லவும், அறிமுகம் … Read more

ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும்! நடிகர் ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” ஒரு தாயின் நீதிக்கான இறுதி குரல் இதுவாகவே இருக்கட்டும். இத்தாயின் வேதனை தவிர்ப்போம். நீதியை விதைப்போம்.” என பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/ByjqaPkhArQ/?utm_source=ig_web_copy_link