சட்டம் தன் வாசலை திறந்த பின்பும் 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி – பேரறிவாளன் தாயார்!

சட்டம் தனது வாசலை திறந்த பின்பும் அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழுபேர் இத்தனை வருடங்களாகியும் விடுவிக்கப்படாதது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்பொழுது வரையிலும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்கப்படவில்லை.

ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் அவர்களை விடுதலை செய்தது போல தனது மகனையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாயார் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 7 பேர் விடுதலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம் தன் வாசலைத் திறந்த பின்பும் அரசியல் காரணங்களுக்காக 7 பேரின் விடுதலை மறுக்கப்பட்டு இருப்பது அநீதி என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal