மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்…!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் , மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு, இன்று  அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோளின் படி அதிமுகவினர் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றவுள்ளனர். மேலும், செல்வி ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வருகிற அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து  வைக்கவுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.