அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அஇஅதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே கட்சிக்குள்ளேயே சில சர்ச்சைகள் இருந்து வரக்கூடிய நிலையில், விரைவில் அதிமுக வேட்பாளர் யார் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்பதை … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது எப்படி… அப்பல்லோ பதிலளிக்க உத்தரவு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் செல்வி  ஜெயலலிதா, 2016 செப்டம்பரில், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, இரண்டரை மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2016 டிசம்பர், 5ஆம் தேதி  உயிரிழந்தார்.  இவரது மரணம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதையடுத்து, … Read more

ஜெ.ஜெ நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணி முடிவு… விரைவில் நினைவிடம் திறப்பு…

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வந்த பீனிக்ஸ் பறவை வடிவமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வரும் அக்டோபர் 2-வது வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்நிலையில் நினைவிடத்தில் ராட்சத அளவிலான பீனிக்ஸ் பறவை போன்ற வடிவம் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மெருகேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், ‘50 ஆயிரத்து 422 சதுர … Read more

4 கிலோ தங்கம் உட்பட வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் இதோ!

வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை தமிழக அரசு, அரசு நாளிதழில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்கம் – 4 கிலோ 372 கிராம் வெள்ளி  – 601 கிலோ 424 கிராம் வெள்ளி பொருட்கள் – … Read more

வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டது! அரசிதழில் வெளியீடு!

வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது.  இதனையடுத்து, இந்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும்  அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு … Read more

ஜெ. இல்லத்தை கையகப்படுத்தும் வழக்கு.. வேறு அமர்வுக்கு மாற்றி பட்டியலிட பரிந்துரை!

ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிட கோரி தீபக் தொடர்ந்த வழக்கு, தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட பரிந்துரை. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா மற்றும் தீபக் உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேதா … Read more

#Breaking: தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்க்கு முன்னே இரண்டாம் நிலை வாரிசாக அறிவித்த நிலையில், தற்பொழுது நேரடி வாரிசாக மாற்றி அமைத்தது உயர்நீதிமன்றம். ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வாகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும், தீபா வேதா நிலையத்திற்குள் … Read more

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மராய்ந்தார். இவரது மறைவு அரசியல் பிரபலங்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அவர்கள் தெரிவித்திருந்தார்.  எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு, ஜெயலலிதாவின் உறவினரான தீபா எதிர்ப்பு தெரிவித்து, சென்னை … Read more

மறைந்த முதல்வர் ஜெ அவர்களின் வீட்டை நினைவிடமாக்க நிலம் எடுப்பு!

மறைந்த தமிழகத்தின் பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதற்கு நிலம் எடுப்பது குறித்த அறிவிபை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்த முன்னாள் முதல்வர் தான் ஜெயலலிதா. இவரது மறைவுக்கு பின்பு போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி ஏற்கனவே கூறியிருந்தார்.  இந்நிலையில், இந்த இல்லத்தை தர போவதில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு … Read more

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக்! இணையத்தை கலக்கும் புகைப்படம்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் நியூ லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேர்ப்பாய் பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனாவின் சகோதரியும், மேலாளருமான ரங்கோலி சந்தெல், தலைவி படத்தின் நியூ … Read more