4 கிலோ தங்கம் உட்பட வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் இதோ!

வேதா இல்லத்தில் உள்ள பொருட்களின் பட்டியல்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை தமிழக அரசு, அரசு நாளிதழில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள பொருட்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

 • தங்கம் – 4 கிலோ 372 கிராம்
 • வெள்ளி  – 601 கிலோ 424 கிராம்
 • வெள்ளி பொருட்கள் – 162  பொருட்கள்
 • சமையல் பெருட்கள் – 6514 பொருட்கள்
 • புத்தகங்கள் – 8,376
 • நினைவு பரிசுகள் – 394
 • டிவி – 11
 • பிரிட்ஜ் – 10
 • ஏசி – 38
 • பர்னிச்சர் – 556
 • பூஜை பொருட்கள் – 15
 • காட்சி பெட்டி பொருட்கள் – 1055
 • துணி, தலையணை, பெட்சீட், டவல், காலணி – 10,438
 • தொலைபேசி – 29
 • சமையல் மின்சார பொருட்கள் – 221
 • மின்சார பொருட்கள் – 251
 • கடிகாரம் – 6

என வேதா இல்லத்தில் மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.