கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்…!

நாமக்கல்லை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி அருகே உள்ள, முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்துள்ளார். ரேவதி தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, அப்பெண் அந்த பாம்பை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து, அந்த பாம்போடு அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிஸ்சார்ஜ்..!

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உடலநலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ரயிலில் சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்…!

H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பினார். தமிழக பல்லகிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், H1N1 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். ஓரிரு நாட்கள் தொடர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி … Read more

புதுச்சேரி மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதி!

காய்ச்சல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 150 குழந்தைகள் அனுமதி என சுகாதார இயக்குநர் தகவல். புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாவே வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் 50% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அளித்து … Read more

மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் – தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி நேரம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை அனைத்து ஊழியர் மற்றும் சுகாதாரப் பணியாளர் சங்கம், மதுரை, மருத்துவத் துறையில் பணியாற்றும் அடித்தளப் பணியாளர்களின் பணி நேரத்தினை 8 மணி நேரமாக நிர்ணயம் செய்து ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு … Read more

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி..!

உடல்நலக்குறைவு காரணமாக டிடிவி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதி.  அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க … Read more

திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.  திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை லயித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி..!

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.  சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

#Shocking:இந்தியாவில் முதல் ‘குரங்கு அம்மை’ தொற்று? – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில்,தற்போது பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியுள்ளது. குரங்கு அம்மையின் முதற்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல்,உடல் வலி,தலைவலி போன்றவை ஏற்படும் என்றும்,இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும்,அதன்பின்னர் அவை கொப்புளங்களாக மாறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு குரங்கு … Read more

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள், கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வெட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தார். இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.