#Shocking:இந்தியாவில் முதல் ‘குரங்கு அம்மை’ தொற்று? – மாணவர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில்,தற்போது பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது.குறிப்பாக,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவியுள்ளது.

குரங்கு அம்மையின் முதற்கட்ட அறிகுறிகளாக காய்ச்சல்,உடல் வலி,தலைவலி போன்றவை ஏற்படும் என்றும்,இதனைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகளும்,அதன்பின்னர் அவை கொப்புளங்களாக மாறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில்,கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு குரங்கு அம்மை தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு மிட்னாபூரைச் சேர்ந்த அந்த இளைஞர் ஐரோப்பாவில் படித்து வரும் நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய நாட்டிலிருந்து நாடு திரும்பினார்.

இதனைத் தொடர்ந்து,அந்த இளைஞர் உடலில் ‘சொறி’ மற்றும் கொப்புளங்கள் போன்ற குரங்கு அம்மை அறிகுறிகளுடன் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால்,அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு (என்ஐவி) பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.சோதனை அறிக்கை இன்னும் வரவில்லை.எனினும், இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

Leave a Comment