#Flash:ட்விட்டருடனான ஒப்பந்தம் ரத்து – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.தனது பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு ட்விட்டர் நிர்வாகம் பதில் அளிக்கவில்லை என்றும் எலான் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து,ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட எலான் மஸ்க் மீது வழக்கு தொடரப்போவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே,இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க்கின் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.அதாவது ட்விட்டரில் உள்ள ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தகவல்களைத் தர நிறுவனம் மறுத்தால் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் விலகி கொள்ளக்கூடும்.மேலும்,ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தந்தை மீறியதால் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ள எலான் மஸ்க்கிற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment