#கனமழை:இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை:வால்பாறையில் இன்றும்,நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில்,கனமழை காரணமாக கோவை மாவட்டத்தின் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் (ஜுலை 7),நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு விடுத்துள்ளார். மேலும்,தொடர் மழை பெய்து வருவதால் வாகன … Read more

#Breaking:இன்று முதல் 3 நாட்கள்;பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

காரைக்காலில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதில்,100-க்கும் மேற்பட்டோருக்கு காலரா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம்,காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.இதனால்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” அரசு அறிவித்தது.மேலும்,பொதுஇடங்களில் அதிக பேர் ஒன்று … Read more

நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் – கே.பால கிருஷ்ணன்

நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்த கே.பால கிருஷ்ணன். கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளி தொடங்க உள்ள நிலையில், நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட கடந்த 2 கல்வி ஆண்டுகளைத் தொடர்ந்து, தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நாளை புதிய வகுப்பறைகளுக்கு திரும்பும் மாணவச் செல்வங்களுக்கு … Read more

#BREAKING : தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  கோடை  விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு :  1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு; 11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 12-ம் வகுப்பு … Read more

ஜூன் 4-வது வாரத்தில் பள்ளிகள் திறக்க திட்டம் – பள்ளிக்கல்வித்துறை

ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மே-14-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் மாதம் 13-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வினாத்தாள் திருத்தும் பனி, … Read more

மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – நீலகிரி ஆட்சியர்

மே-20-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவித்த நீலகிரி ஆட்சியர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வது உண்டு. இதனால் ஆண்டுதோறும் இந்த நாட்களில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சி 20-ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த … Read more

குஷியோ குஷி…1-9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே விடுமுறை? – முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

1-9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை! தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார்.மேலும்,கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்படாதல் பாடங்கள் நடத்தி … Read more

மே 5ம் தேதி உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு!

மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் … Read more

நாளை முதல் ஜூன் 5 வரை உயர் நீதிமன்றம் கிளை விடுமுறை!

நாளை முதல் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளித்து பதிவுத்துறை அறிவிப்பு. நாளை முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை மே 1 முதல் தொடங்க உள்ளதால், கோடை விடுமுறை அமர்வு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையில் நீதிபதிகள் பாரத … Read more

குஷியோ குஷி…இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று  (ஏப்ரல் 29) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஆனால்,இன்று தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும்,இன்றைய விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிப்பதற்காக மட்டும் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் … Read more