, , ,

குஷியோ குஷி…இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

By

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று  (ஏப்ரல் 29) மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால்,இன்று தேர்வு நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும்,இன்றைய விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிப்பதற்காக மட்டும் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த ஊழியர்களோடு செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும்,இன்றைய விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகின்ற மே 7 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.

 

Dinasuvadu Media @2023