பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனம் -அதிரடி முடிவு…!

பேஸ்புக்,வாட்ஸ்-அப் மற்றும் கூகுள் நிறுவனம் ஆகியவை மத்திய அரசின் புதிய சட்ட விதிகளை ஏற்பதாக தெரிவித்துள்ளன. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY),கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் … Read more

“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” – பேஸ் புக்…!

“கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நீக்க மாட்டோம்” ,என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இதனைத் தொடர்ந்து,சமூக ஊடகங்கள் அதன் கொள்கையின் ஒரு பகுதியாக,கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் தங்கள் தளங்களில் பரப்பப்படுவதை தடை செய்தன. இந்நிலையில்,கடந்த 2019-ம் ஆண்டில் கொரோனா பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் உள்ள மூன்று விஞ்ஞானிகள்,கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் … Read more

அடிபணிந்த பேஸ் புக்..! “மத்திய அரசின் விதிகளை ஏற்கத் தயார்” என அறிவிப்பு…!

மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது. அதன்படி,இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் … Read more

இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!!

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்,”ரீட் ஃபர்ஸ்ட்”(Read First) என்ற புதிய வசதியை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் இனி செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது. பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,பயனர்கள் செய்திகளை பகிர்வதற்கு முன்பு அதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. அதாவது,பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு அதை அப்படியே மற்றவர்களுக்கு பகிர முயன்றால்,செய்தியை முழுவதும் படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்று திரையில்(display) … Read more

ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கிய பேஸ்புக் தலைமை நிர்வாகி!

பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில்  600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கியுள்ளார். பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை 391 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. மார்க் அவர்களுக்கு ஏற்கனவே அங்கு ஏக்கர் கணக்கில் நிலம் உள்ள நிலையில், தற்போதும் 600 ஏக்கர் வாங்கி உள்ளார். இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம் இவருக்கு ஆயிரத்து 300 ஏக்கர் … Read more

பேஸ்புக்கில் நீக்கப்பட்ட #Resignmodi ஹேஸ்டேக்….! காரணம் இதுதானா…? விளக்கமளித்த பேஸ்புக் நிறுவனம்…!

மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால், நாங்கள் முடக்கவில்லை. அது தவறுதலாக முடக்கப்பட்டுவிட்டது.  பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏதாகிலும் ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக #GoBackModi என்ற  ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவற்றை கருத்தில் கொண்டு #Resignmodi என்ற ஹேஷ்டேக் பேஸ்புக் … Read more

எச்சரிக்கை..!533 மில்லியன் பயனர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிவு:உங்கள் தகவல் உள்ளதா? என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உலகளவில் 533 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பாதித்த பேஸ்புக் தகவல் மீறலில், உங்கள் பேஸ்புக் கணக்கும் உள்ளதா என்பதை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பது? சமீபத்தில், உலகளவில் 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் போன்ற பிற தகவல்கள் ஆன்லைனில் இலவசமாக கசிந்தன. ஆகவே,தகவல் மீறல்களைக் கண்காணிக்கும் இணையதளமான ‘ஹேவ் ஐ பீன் ப்வென்ட்’ என்ற டார்க் வெப் வழியாக உங்கள் கணக்கை சரிபார்க்க  நீங்கள் அணுகாவிட்டால், பேஸ்புக்கிலிருந்து உங்கள் … Read more

அதிர்ச்சி ! 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்களை வெளியிட்ட ஹேக்கர்கள்!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் 533 மில்லியன் பயனர்களின் தொலைபேசி எண்கள், பிறந்த நாள், இருப்பிடங்கள் மற்றும் முழு பெயர்கள் ஹேக்கர்களால் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கும். இதில் இந்தியாவை சேர்ந்த  சுமார் 6 மில்லியன் பயனர்களின் பதிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. அது தவிர அமெரிக்காவை சேர்ந்த  32 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகள், மற்றும் இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனர்கள் தகவல்கள் … Read more

டிக் டாக் செயலிக்கு மாற்றாக அறிமுகமாகும் புதிய செயலி…! பேஸ்புக் நிறுவனம் அதிரடி…!

பேஸ்புக் நிறுவனம், டிக் டாக் போலவே செயல்படும் BARS என்ற சாட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதல் போக்கின் காரணமாக, சீன தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் இந்த செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்திய அரசின் இந்த செயல் டிக்டாக் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் பல செயலிகள் அறிமுகம் ஆனாலும், டிக் டாக் செயலிக்கு ஈடான ஒரு திருப்தியை இந்த … Read more

#Facebook:ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் மீதான தடையை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயனர்கள் பார்க்கவோ படிக்கவோ முடியாதபடி பேஸ்புக் செய்தி நிறுவங்களின் பக்கங்களை முடக்கியது.இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்றிய புது சட்டமான ‘நியூஸ் மீடியா பார்கெயினிங் கோட்’. இச்சட்டத்தின் படி செய்திகளுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்கிற ஆஸ்திரேலியாவின் புதிய சட்டம் சர்ச்சை கிளப்பியது.இதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது.பேஸ்புக் நிறுவனம் ஒருபடி மேலே போய் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் முகநூல் பக்கங்களை … Read more