பேஸ்புக்கின் புதிய போர்டல் கோ, போர்டல் பிளஸ்-ஐ அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்!

புதிய சாதனமான போர்டல் கோ மற்றும் போர்டல்+ ஆகியவற்றை ஃபேஸ்புக் லைவ் மூலம் அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க். மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் லைவ் மூலம் போர்டல் கோ மற்றும் போர்டல்+ ஆகிய இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய சாதனங்கள் மூலம், பேஸ்புக் தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த வீடியோ அழைப்பு அனுபவத்தை அளிக்க முயற்சிக்கிறது. இந்த இரண்டு சாதனங்களின் அனைத்து அம்சங்கள், விலை மற்றும் முன்-முன்பதிவு பற்றிய தகவல்களை தெரிவித்தார். … Read more

ஃபேஸ்புக் நிறுவனம் – ரே-பான் நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது…!

ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் போன் வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பான் கண்ணாடி நிறுவனத்துடன் இணைந்து தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரேபான் ஸ்டோரிஸ் எனும் ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடியில் 5 மெகாபிக்சல் கேமரா, ஓபன் இயர் ஸ்பீக்கர்,  3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் உள்ளது. மேலும் இந்த கண்ணாடி மூலமாக 30 செகண்ட் வீடியோவையும் உருவாக்கலாம் என கூறப்படுகிறது.  … Read more

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் புதிய வசதி..!

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.  தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும். … Read more

சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி…! வைரலாகும் புகைப்படம்…!

 உத்திரபிரதேசத்தில், சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி.  ஐஏஎஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, உத்திர பிரதேசத்தில் போக்குவரத்துத் துறையில் சிறப்புச் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சாலையோர கடையிலிருந்து காய்கறி விற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மிஸ்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் சில வேலைகளுக்காக பிரக்யாராஜுக்கு சென்றேன். திரும்பும் வழியில் காய்கறிகளை … Read more

தாலிபான்களின் வாட்சப் கணக்குகள் முடக்கம் – பேஸ்புக் நிறுவனம்..!

தாலிபான்களின் வாட்சப் கணக்குகள் முடக்கப்படுவதாக  பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை தொடர்ந்து வாட்சப் கணக்குகளையும் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி, தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் ஆபத்தான நிறுவனக் … Read more

#Breaking:தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கம்..!

தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக  பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்,தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி,தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் ஆபத்தான நிறுவனக் கொள்கைகளின் கீழ் … Read more

“அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும்” – ஜுக்கர்பெர்க்…!

அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் “மெட்டாவர்ஸ்” என்ற டிஜிட்டல் உலகில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை உருவாக்குகிறது, அங்கு மக்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் செல்லவும் மெய்நிகர்(Virtual) சூழலில் தொடர்பு கொள்ளவும் முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று தெரிவித்தார். இதனையடுத்து,இந்த அணி பேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் … Read more

இனி சமூக வலைத்தளங்களில் இது போன்று பதிவிட்டால் உடனடி கைது!

இனிமேல் சமூக வலைத்தளங்களில் பெண்களை தவறாக சித்தரித்தல் மற்றும் சாதிய மோதல்களை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில்  ஆபாசமாக கருத்து பதிவிடுபவர்களை கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இதுவரை ஆபாசமாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு கருத்து பதிவிட்டு வரக்கூடிய 16 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்…!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உலககளாவிய தலைவர்களையும்,அரசியல்வாதிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு, தலைவர்களின் நடவடிக்கை குறித்து கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது. இதற்கிடையில்,அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால்,அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். இதனையடுத்து,ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள்  அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான … Read more

காதலியைத் தேடிச்சென்றவர் 2017 லிருந்து காணவில்லை… முகநூலில் மலர்ந்த காதலால் விபரீதம்!

சுவிட்சர்லாந்திற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் நடைபாதையாக காதலியைத் தேடிச் சென்றவர் பாக்கிஸ்தானில் பிடிபட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த், தான் விரும்பிய ஒரு பெண்ணைச் சந்திக்கப் சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்தபோது அவர் பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது. மேலும் பிரசாந்த் நேற்று முன்தினம் ஹைதராபாத்திற்கு வந்தடைந்தார். அதாவது பிரசாந்த் என்ற மென்பொருள் பொறியாளர் ஏப்ரல் 2017 இல் காணாமல் போயிருந்தார். 30 மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, … Read more