சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி…! வைரலாகும் புகைப்படம்…!

 உத்திரபிரதேசத்தில், சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி. 

ஐஏஎஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, உத்திர பிரதேசத்தில் போக்குவரத்துத் துறையில் சிறப்புச் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சாலையோர கடையிலிருந்து காய்கறி விற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மிஸ்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் சில வேலைகளுக்காக பிரக்யாராஜுக்கு சென்றேன். திரும்பும் வழியில் காய்கறிகளை பார்த்து விட்டு அங்கே நின்றேன்.

அந்த கடையின் விற்பனையாளர் ஒரு வயதான பெண்மணி, தனது குழந்தை அதிக தூரம் சென்று விட்டதால் நான் திரும்பி வருவேன் என்று கூறி, தனது கடையை கவனித்துக் கொள்ளுமாறு என்னிடம் கேட்டார். நான் அவளுடைய கடையில் அமர்ந்தபோது ஒரு வாடிக்கையாளர் வந்தார். அதனை எனது நண்பர் ஒருவர் என்னை புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.