டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்…!

டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கம்…!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உலககளாவிய தலைவர்களையும்,அரசியல்வாதிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு, தலைவர்களின் நடவடிக்கை குறித்து கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது.
இதற்கிடையில்,அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால்,அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து,ஜோ பைடன் வெற்றிபெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள்  அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.அப்போது,டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து,டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி,அதனை சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார் என்று சமூக ஊடகமான ட்விட்டர் அவரின் அதிகாரப்பூர்வ கணக்கை முடக்கின.
ஆனால்,பேஸ்புக் நிறுவனம்,டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்காமல் கடந்த ஜனவரி முதல் தற்காலிகமாக தடைவிதித்தது.
இந்நிலையில்,முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி டொனால்டு டிரம்பின் பேஸ்புக் கணக்கானது வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது.மேலும்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் மீண்டும் அவரின் பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Join our channel google news Youtube