டிக் டாக் செயலிக்கு மாற்றாக அறிமுகமாகும் புதிய செயலி…! பேஸ்புக் நிறுவனம் அதிரடி…!

பேஸ்புக் நிறுவனம், டிக் டாக் போலவே செயல்படும் BARS என்ற சாட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையிலான மோதல் போக்கின் காரணமாக, சீன தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் இந்த செயலியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இந்திய அரசின் இந்த செயல் டிக்டாக் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் பல செயலிகள் அறிமுகம் ஆனாலும், டிக் டாக் செயலிக்கு ஈடான ஒரு திருப்தியை இந்த செயலிகள்  கொடுக்கவில்லை.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், டிக் டாக் போலவே செயல்படும் BARS என்ற சாட் வீடியோ மேக்கிங் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இதில் தற்போது பீட்டா வெர்ஷன் ஆக வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பேஸ்புக் நிறுவனம் கூறுகையில், பயனர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, சில மாற்றங்களைக் கொண்டுவந்து, அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.