இன்ஸ்டாகிராமில் புதிய வசதி மெசேஜ் மூலமாகவே பொருட்களை வாங்கலாம் !

இன்ஸ்டாகிராம் மெட்டாவின் நியூஸ்ரூம் வழியாக புதிய “பேமெண்ட்ஸ் இன் சேட்” அம்சத்தை இன்று அறிவித்தது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் இப்போது சேட் பக்கத்தில் மெட்டா பே -ஐ பயன்படுத்தி சிறு வணிகங்களிலிருந்து பொருட்கள் வாங்கலாம். இன்ஸ்டாகிராம் மக்களை இணைக்க உதவுகிறது. இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையே மட்டுமல்லாமல் மக்கள் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இனி இன்ஸ்டாகிராம் சேட் பக்கத்தில், மெட்டா பே மூலம் பணம் செலுத்தவும், தங்கள் ஆர்டரைக் கண்காணிக்கவும் மற்றும் ஆர்டர் குறித்து … Read more

ஒரே நேரத்தில் கூகுள் ,ஃபேஸ்புக், அமேசான் என மூன்று ஜாக்பாட் வேலைவாய்ப்பை பெற்ற மாணவர்.!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் பேஸ்புக்கில் இருந்து 1.8 கோடி ரூபாய் வருடாந்திர ஊதியத்துடன் கூடிய வேலையைப் பெற்றுள்ளார். கணினி அறிவியலில் நான்காம் ஆண்டு படிக்கும் பிசாக் மொண்டல், ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு அதிக ஊதியத்துடன் வேலையை பெரும் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிசாக் மொண்டல் பிர்பூமின் ராம்பூர்ஹாட்டின் ஒரு சாதாரண பின்னணி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தந்தை விவசாயி, தாய் அங்கன்வாடி பணியாளர். இதுகுறித்து அவர் இந்தியா டுடேவிடம் அளித்த … Read more

பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கையை ஏற்காததால் சிறுமியை கொலை செய்த இளைஞன்…!

உ.பி-யில் பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கையை ஏற்காததால், ரவி என்ற இளைஞன்  சிறுமியை கொலை செய்துள்ளார்.  உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில், பேஸ்புக்கில் தனது நண்பர் கோரிக்கையை சிறுமி நிராகரித்ததால், ரவி என்ற இளைஞன் சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த சிறுமியின் தந்தை தேஜ்வீர் சிங் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங் ஃபரிதாபாத் தொழிற்சாலையில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். இந்த சம்பவம் குறித்து எஸ்பி … Read more

38 சதவீதம் பேர் வெறுப்பை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர்.! அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக்.!

Facebook பக்கத்தில் 38 சதவீதம் பேர் வெறுப்புப் பேச்சுகளை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளனர் என்று அந்நிறுவனம் தகவல்.  இதுதொடர்பாக Meta நிறுவனம் வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, சமூக ஊடகத் தளமான ஃபேஸ்புக்கில் வெறுப்புப் பேச்சுக்கள் சுமார் 37.82 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்ஸ்டாகிராமில் வன்முறை மற்றும் தூண்டுதல் உள்ளிட்ட உள்ளடக்கங்கள் 86 சதவீதம் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. இதில், பெரும்பாலான உள்ளடக்கம், பயனர்கள் தங்களுக்குப் புகாரளிப்பதற்கு முன்பு சமூக ஊடகத் தளங்கள் மூலம் கண்டறிவதை அடிப்படையாகக் … Read more

#FB COO: மெட்டா சிஓஓ பதவியை ராஜினாமா செய்தார் ஷெரில் சாண்ட்பெர்க்

முகநூல் ,வாட்ஸப் ,இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வின் செயல்பாட்டு இயக்குநரான ஷெரில் சாண்ட்பெர்க்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஷெரில் சாண்ட்பெர்க் ராஜினாமா: மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குப் பிறகு மெட்டாவில் இரண்டாவது மிக முக்கியமான நபரான சாண்ட்பெர்க், வியாழன் அன்று அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில்  மெட்டாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.இவர் மெட்டா நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சாண்ட்பெர்க் தனது பதவியைவிட்டு விலகினாலும்,அவரை நிர்வாக குழுவில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஜேவியர் ஆலிவன் … Read more

ஃபேஸ்புக் காதலனை திருமணம் செய்ய வங்கதேசத்திலிருந்து ஆற்றில் நீந்தி வந்த 22 வயது பெண்

22 வயதான வங்கதேச பெண் ஒருவர் இந்தியாவை சேர்ந்த தனது காதலனை திருமணம் செய்வதற்காக எல்லையை காடு மற்றும் ஆற்றை கடந்து வந்து திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணா மண்டல் என்ற வங்காளதேச பெண், அபிக் மண்டலுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு பின்பு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.கிருஷ்ணாவிடம் பாஸ்போர்ட் இல்லாததால், சட்டவிரோதமாக எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார். கிருஷ்ணா முதன்முதலில் ராயல் பெங்கால் புலிகளுக்கு பெயர் பெற்ற சுந்தரவனப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.பின்னர் அங்கிருந்து  ஆற்றில் சுமார் ஒரு … Read more

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளி..!

பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள். மைசூரை சேர்ந்த மது என்ற மதுசூதனன் என்பவர் வில்சன் கார்டனுக்கு அருகிலுள்ள லக்கசந்திராவில் 65 வயதான வங்கியாளர் உதய் ராஜ் சிங்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரது 6 கூட்டாளிகளுடன் மார்ச் 2014 இவர் கைது செய்யப்பட்டார். பின் 2017 நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்பின் தலைமறைவானார். 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. … Read more

ரஷ்ய படைகளுக்கு எதிராக பேச பேஸ்புக் அனுமதி..!

16வது நாளாக நீடிக்கும் போர்:  உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 16-வது நாள் இன்று இவ்வளவு நாள் கடந்தும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  இதற்கிடையில், ரஷ்யா … Read more

#BREAKING: ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்ய ஃபேஸ்புக் தடை!

உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட தடை விதித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்துவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய ஊடகத்துக்கு தடை விதிக்கிறோம் என்று ஃபேஸ்புக் பாதுகாப்புக் கொள்கைத் தலைவர் … Read more

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு – கோவை போலீசார் வழக்கு பதிவு..!

ஹெலிகாப்டர் விபத்து குறித்து நான் தான் பாலா என்ற முகநூல் கணக்கில் செய்தி பதிவிட்டவர் மீது 3 பிரிவுகளில் கோவைகாவல் துறை வழக்கு பதிவு. இதுகுறித்து கோவை மாநகரக்காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகரம், “நான் தான் பாலா” என்ற முகநூல் கணக்கில் கடந்த 08.12.2021-ஆம் தேதி இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறித்து அநாகரீகமான முறையில் பிரதமர் அவர்களை தொடர்புபடுத்தி செய்தி மற்றும் கார்ட்டுன் … Read more