#FB COO: மெட்டா சிஓஓ பதவியை ராஜினாமா செய்தார் ஷெரில் சாண்ட்பெர்க்

முகநூல் ,வாட்ஸப் ,இன்ஸ்ட்ராகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா வின் செயல்பாட்டு இயக்குநரான ஷெரில் சாண்ட்பெர்க்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஷெரில் சாண்ட்பெர்க் ராஜினாமா:

மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குப் பிறகு மெட்டாவில் இரண்டாவது மிக முக்கியமான நபரான சாண்ட்பெர்க், வியாழன் அன்று அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில்  மெட்டாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.இவர் மெட்டா நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

சாண்ட்பெர்க் தனது பதவியைவிட்டு விலகினாலும்,அவரை நிர்வாக குழுவில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.மேலும்,ஜேவியர் ஆலிவன் அடுத்த செயல்பாட்டு இயக்குநராக இருப்பார் என்று மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மார்க் ஜுக்கர்பெர்க்:

தலைமை நிர்வாக அதிகாரி ஜுக்கர்பெர்க் சாண்ட்பெர்க்கின் விலகலை “ஒரு சகாப்தத்தின் முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார். “14 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது நல்ல நண்பரும் கூட்டாளியுமான ஷெரில் சாண்ட்பெர்க் மெட்டாவின் சிஓஓ பதவியில் இருந்து விலகுகிறார்” என்று ஜுக்கர்பெர்க் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ பதிவில் தெரிவித்துள்ளார்.

ஷெரிலுடன் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்துவதை நான் இழக்கப் போகிறேன்.ஆனால் அவர் எங்கள் இயக்குநர்கள் குழுவில் தொடர்ந்து பணியாற்றுவார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதனால் வரும் மாதங்களில் அவர் தனது அன்றாட நிர்வாகப் பொறுப்பிலிருந்து மாறிய பிறகும் அவரது ஞானம் மற்றும் அனுபவத்திலிருந்து நாங்கள் பயனடையலாம்.”

author avatar
Dinasuvadu Web

Leave a Comment