ரஷ்ய படைகளுக்கு எதிராக பேச பேஸ்புக் அனுமதி..!

16வது நாளாக நீடிக்கும் போர்: 

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 16-வது நாள் இன்று இவ்வளவு நாள் கடந்தும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  இதற்கிடையில், ரஷ்யா மீது சமூக வலைதளங்களில் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது.

ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூடக்கம்:

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவிற்கு பாடம் கற்பிக்க Facebook மற்றும் பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதனால்,  ரஷ்யாவில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூடக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வீரர்களுக்கு எதிராக பதிவுகளை வெளியிட அனுமதி: 

இந்நிலையில், ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஒரு அறிக்கையில், உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு காரணமாக சில விதிகளை நாங்கள் தற்காலிகமாக தளர்த்தியுள்ளோம்.  அதன்படி, ‘ரஷ்ய படையெடுப்பு மற்றும் புடினுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேச பேஸ்புக் அனுமதி அளித்துள்ளது. ‘ரஷ்ய படையெடுப்பாளர்களின் மரணம்’ போன்ற வன்முறை பேச்சு இதில் அடங்கும். ஆனால் ரஷ்ய மக்களுக்கு எதிரான வன்முறைப் பேச்சை நாங்கள் இன்னும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து உள்ளது.

இந்த நாடுகளுக்கு அனுமதி: 

ரஷ்ய படையெடுப்பு மற்றும் புடினுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேச ஆர்மீனியா, அஜர்பைஜான், எஸ்டோனியா, ஜார்ஜியா, ஹங்கேரி, லாட்வியா, லிதுவேனியா, போலந்து, ருமேனியா, ரஷ்யா, ஸ்லோவாக்கியா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan