பயனர்களின் தகவல் திருட்டு.! ஒப்புக்கொண்டதா பேஸ்புக்.? 725 மில்லியன் டாலர் கொடுக்க ஒப்புதல்.!

பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது. கடந்த 2016 ஆம் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்க பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்த பிரிட்டிஷ் அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பயன்படுத்த அனுமதித்ததாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை 2018முதல் நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று, பேஸ்புக் தாய் நிறுவனமான … Read more

11,000 ஊழியர்கள் பணிநீக்கம்.! மார்க் ஜூகர்பர்க் அதிரடி அறிவிப்பு.!

 வருவாய் குறைந்ததால் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பர்க். பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூகர்பர்க், பேஸ்புக் நிறுவனத்தின் அதிரிபுதிரி வளர்ச்சியை அடுத்து வாட்சாப், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வாங்கி இவை அனைத்தையும் மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்தார். இவை அனைத்தையும் மெட்டா நிறுவனத்தின் கீழ் ஒன்றிணைத்து ஒரு வருட காலத்தில் 600 பில்லியன் அளவுக்கு சரிவை அந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதனால், செலவுகளை சமாளிக்க வேலைக்குறைப்பு நடவடிக்கையில் மார்க் ஜூகர்பர்க் ஈடுபட்டுள்ளார். … Read more

240 கோடி மதிப்பிலான வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.!

2012ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்சோவில் வாங்கிய வீட்டை தற்போது மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க்  விற்றுள்ளார்.  பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தான் 2012இல் வாங்கிய ஆடம்பர வீட்டை தற்போது பெரிய தொகைக்கு விற்றுள்ளார். சான் பிரான்சிஸ்சோவில் உள்ள ஆடம்பர வீட்டை 2012ஆம் ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து மார்க் ஜுக்கர்பெர்க் வாணிகியிருந்தார். அதனை தற்போது 31 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் … Read more

பேஸ்புக்  மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி தந்தையை கொன்ற மகன்!!

மத்திய பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி பணத்திற்காக தனது 59 வயது தந்தையை கொலை செய்ததாக அங்கித் (32), அவரது நண்பர் நிதின் லோதி மற்றும் பீகாரைச் சேர்ந்த கொலையாளி அஜித் சிங் ஆகிய 3 பேரை கைது செய்ததாக இன்று போலீசார் தெரிவித்தனர். மகேஷ் குப்தா(59), ஜூலை 21-22 இடைப்பட்ட இரவில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள பிச்சோர் நகரில் உள்ள தனது வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக் … Read more

ரஷ்ய படைகளுக்கு எதிராக பேச பேஸ்புக் அனுமதி..!

16வது நாளாக நீடிக்கும் போர்:  உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் 16-வது நாள் இன்று இவ்வளவு நாள் கடந்தும் இரு நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களில் உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  இதற்கிடையில், ரஷ்யா … Read more

என்னது மீண்டுமா?….பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் சேவைகள் 2-வது முறையாக பாதிப்பு – மன்னிப்பு கேட்ட நிறுவனம் .!

ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்றிரவு மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி முடக்கப்பட்டன.இதனால்,உலகம் முழுவதும் சுமார் ஒருகோடியே 6 லட்சம் பேர் தகவல்பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் … Read more

கடந்த 6 மாதத்தில் முகநூல் பக்கத்தில் 300 கோடி போலி கணக்குகள் முடக்கம் – பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கரங்களிலும், மொபைல் போனை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளம் தான். பேஸ்புக், வாட்சப், இண்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் ஒரு கணக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், சமூகவலைத்தள பக்கங்களில் பல போலி கணக்குகளும் உருவாகிறது. இதனால் பல பிரச்சனைகள் … Read more