240 கோடி மதிப்பிலான வீட்டை விற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.!

2012ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்சோவில் வாங்கிய வீட்டை தற்போது மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க்  விற்றுள்ளார். 

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தான் 2012இல் வாங்கிய ஆடம்பர வீட்டை தற்போது பெரிய தொகைக்கு விற்றுள்ளார்.

சான் பிரான்சிஸ்சோவில் உள்ள ஆடம்பர வீட்டை 2012ஆம் ஆண்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து மார்க் ஜுக்கர்பெர்க் வாணிகியிருந்தார்.

அதனை தற்போது 31 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் 240 கோடிக்கு விற்றுள்ளார். அந்த ஆடம்பர வீடு 7,300 சதுர அடி கொண்டது ஆகும். அங்கு 4 பெட்ரூம், நீச்சல் குளம், மதுபான அறை என சகல வசதியும் உண்டு.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment