துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு..!

பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு  துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. இந்நிலையில்,  திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி … Read more

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் வேட்புமனு தாக்கல்

திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது .இதனிடையே திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். எனவே திமுக பொருளாளர், … Read more

துரைமுருகன் அடுத்த விக்கெட், அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்திகள் தினமலர் (7.8.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.என் வரலாறு தினமலருக்கு தெரியாது … Read more

பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் – துரைமுருகன் அறிக்கை

பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் என்று  துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்திகள் தினமலர் (7.8.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது. இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.என் வரலாறு தினமலருக்கு தெரியாது போலும். எம்.எல்.ஏ, எம்.பி, … Read more

கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை.. திமுக பொருளாளர் துரைமுருகன்

நேற்று டெல்லியில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து, கு.க. செல்வம் பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர், ஜே.பி. நட்டாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் பாஜகவில் இணையவில்லை என கூறினார்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கு.க. செல்வத்தை பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்துக்கு நேராக சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், திமுகவில் … Read more

எம்.ஜி.ஆர், வைகோ கட்சியை விட்டு பிரிந்து சென்றபோதே திமுக சிறிய இடர்பாடுகளை தான் சந்தித்தது.! – துரைமுருகன் கருத்து.!

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக்கூறியுள்ளார். திமுக கட்சியை சேர்ந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துவிட்டார். மேலும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், அவர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்ட அவை சந்தித்து உள்ளார் மேலும் செல்வம் என்று தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் … Read more

வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் – துரைமுருகன்

வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவரும் ,திமுக சட்ட மன்ற உறுப்பினருமான துரைமுருகன் பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதிமுக அமைச்சர் மற்றும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பது ஆபத்தானது என்பதை அரசு உணர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#BREAKING : திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல்

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிட விரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் காலமானதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாக இருந்தது . கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும்.இதற்கு இடையில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திமுக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது.    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் … Read more

ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடியை யானைகள் நாசம் செய்துவிட்டன …சட்டப்பேரவையில் துரைமுருகன்…

தமிழக சட்டப்பேரவையில்  நேற்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது எதிர்கட்சித்துணை தலைவர் துரைமுருகன் காடுகளை விட்டு யானைகள் அதிகளவில் வெளியேறி  விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.  காட்பாடியிலுள்ள தனது தோட்டத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்ததாகவும் கூறினார்.இதற்கு பதிலளித்த  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தோட்டம் வளமாக இருப்பதால் ருசியறிந்து யானைகள் அவரது தோட்டத்தை தேடி வருகிறது. யானைகள் விரும்பும் உணவை பயிர் … Read more

துரைமுருகன் தான் திமுகவின் புதிய பொதுச்செயலாளரா.?

திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன் காலமானதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளர் பதவி தற்போது காலியாகியுள்ளது. கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும் எனபதால், புதிய நபரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அக்கட்சி விதிகளின்படி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் நியமனம் செய்யப்படாமல் தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறது. திமுகவின் உட்கட்சி தேர்தல் தற்போதுதான் தொடங்கியுள்ளதால், அது முடிவதற்கு முன்பாகவே பொதுக்குழுவை கூட்ட வேண்டிய … Read more