என்ன நடந்தாலும் நாங்கள் தினகரனை விட்டு போகமாட்டோம்! எம்.எல்.ஏ.க்கள் உறுதி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்,3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்போம் என்று  தெரிவித்தனர். 18 எம்.எல்.ஏ.க் களின் தகுதி நீக்க வழக்கில் ‘சபாநாயகரின் அதி காரத்தில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார். அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் … Read more

நீங்கள் பிஎஸ்என்எல் பிரீபெயிட் வாடிக்கையாளரா?இதோ உங்களுக்கான மெகா சலுகை!

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை அறிவித்துள்ளது. ரம்ஜான் சிறப்பு சலுகை பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈத் முபாரக் எஸ்டிவி 786 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். மொத்தத்தில் ரூ.786 பிஎஸ்என்எல் சலுகையில் பயனர்களுக்கு 300 ஜிபி டேட்டா, 15,000 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. … Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்!அமைச்சர் செங்கோட்டையன் 

தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் படிப்புக்கு பயிற்சி அளிக்கப்படும் .12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பள்ளி மாணவர்கள் புத்தகங்களை படிக்க நடமாடும் நூலகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.  மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. மாணவர்களுக்கு … Read more

ரம்ஜான் விடுமுறை உண்டா?கிடையாதா?மக்களை மாறி மாறி குழப்பிய அரசு

இன்று  ரம்ஜான் பண்டிகையொட்டி அரசு விடுமுறை விடப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சில தனியார் நிறுவனங்கள் என மாலையே விடுமுறை என்பதை உறுதி செய்ததால், மூன்று நாள் விடுமுறை என்ற எண்ணத்தில் பல்வேறு திட்டமிடலுடன் அரசு பணியாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் உற்சாமாக விடு திரும்பினர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் பலர் வெளியூர்களுக்கு கிளம்பினர். சிலர் … Read more

இனி திருமணம் செய்தால் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்!மேனகா காந்தி அதிரடி அறிவிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருமணம் செய்தால் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில்,வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருமணம் செய்தால் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது என்றும்  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை … Read more

நீதிமன்றங்கள் மக்களின் நம்பிக்கைக்கேற்ப செயல்பட வேண்டும்!திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ,நீதிமன்றங்கள் நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கையான புகலிடமாக இருந்து வருபவை என்பதால் அதற்கேற்ப நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டிஜிட்டல் இந்தியா கிராமப்புற மக்களுக்காகவே!பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி,ஏழை, எளிய கிராமப்புற மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெறுவதற்காகவே டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக  தெரிவித்துள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடல் நடத்தினார். அப்போது, கிராமப்புற மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே டிஜிட்டல் இந்தியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறினார். ரயில்வே பயணச்சீட்டுக்கான முன்பதிவு, கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற சேவைகள், … Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜானை இன்புறக் கொண்டாடி மகிழ வாழ்த்து!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியப் பெருமக்கள் புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவதாகக் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு மேன்மையுற தமிழக … Read more

அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்ட நிதி ஆயோக்!இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் குடிநீர் பிரச்சனை!குடிநீர் கிடைக்காமல் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழப்பு!

நிதி ஆயோக் அமைப்பு, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது கடும் தண்ணீர் பிரச்சனை இருப்பதாகவும், ஆண்டுதோறும் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும்  தெரிவித்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் தண்ணீர் தேவை இருமடங்காக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் சூழல் ஏற்படும் என்றும், தண்ணீர் பிரச்சனையால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் … Read more

தமிழகத்தை மாற்ற வருகிறது பயோ – பிளாஸ்டிக்..!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எளிதில் மக்கும் பயோ பிளாஸ்டிக் பைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகாரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் மண்வளமும், அதனை எரிக்கும் போது காற்றும் கடுமையாக மாசடைகிறது. நிலத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழை நீரை நிலத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து விடுவதால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகின்றது.   … Read more