இப்படியும் ஒரு மனிதர்களா?தனியாக இளம்பெண்ணை விட்டுச் செல்ல மனமின்றி காத்திருந்த அரசு பேருந்து ஓட்டுனர்,நடத்துனர்!

இரவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் கேரள மாநிலத்தில்  தனியாக இறங்கிய இளம்பெண்ணை தனியாக விட்டுசெல்ல மனமின்றி காத்திருந்த அந்த பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த ஞாயிறு அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று  திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கோபாகுமார் (41) என்பவர் டிரைவராகவும், ஷைய்ஜூ (40) என்பவர் கண்டக்டராகவும் பணிபுரிந்தனர். இந்நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த ஆதிரா என்ற இளம்பெண் ஒருவர் இறங்க வேண்டிய கொல்லம் … Read more

தூங்கிக்கொண்டிருந்த நாய் மீது சாலை அமைத்த ஊழியர்கள்! மக்கள் கடும் எதிர்ப்பு!

 சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது உத்தரப்பிரதேசத்தில் சாலை அமைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவில் புகழ்பெற்ற தாஜ்மகால் அருகே சாலை அமைக்கும் பணியில்  பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது கொதிக்கும் தாரை ஊற்றினர். இதனால் படுகாயமடைந்த நாய் அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் அந்த நாய் இறந்து விடவே, இதையடுத்து சாலைப்பணியாளர்கள் இறந்த நாயைக் கூட அப்புறப்படுத்தாமல் அதன் இடுப்புப் … Read more

ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ஒருமாத சண்டை நிறுத்தம் இன்றுடன் முடிவடைகிறது!

ஜம்மு காஷ்மீரில் ரம்ஜானை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்த ஒருமாத சண்டை நிறுத்தம் இன்று முடிவுக்கு வருகிறது. இதனால் இம்மாதம் முழுவதும் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ஆளாகி கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்த இந்திய ராணுவத்தின் கைகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. ரம்ஜானை தாண்டியும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. எனினும் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது என்றே கூறப்படுகிறது. நேற்று பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவர் ஸ்ரீநகரில் பல்வேறு அரசியல் … Read more

தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை!மேற்குவங்கத்தில் ரஜினிகாந்த் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒருமாதம் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதியில் மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் காலா … Read more

நாளை இ-சேவை மையங்கள் செயல்படாது!

தமிழக அரசு அறிவிப்ப்பில்  பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக் கிழமை) காலை முதல் மாலை வரை அரசு இ-சேவை மையங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 423 அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை … Read more

சென்னை அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் குழுவின் இன்றைய ஆய்வை  ரத்து !

சென்னை அப்போலோவில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் குழுவின் இன்றைய ஆய்வை  ரத்து செய்துள்ளனர். முன்னதாக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று  அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் இன்று  காலை … Read more

இணையத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்ற ஷாருக்கான்-சல்மான் கான் டீசர்!

இணையத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜீரோ ( zero) படத்தின் டீசர்  அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனந்த் ராய் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அப்பு போல் 3 அடி உயர கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். வெளியான டீசரில் குள்ளமான ஷாருக்கானுடன் சல்மான் கான் தோன்றும் காட்சி இடம் பெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் இன்று  பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து!

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் தமிழகத்தில் இன்று  பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளது. இதேபோல் தமிழகம் எங்கும் நேற்று  பிறை தெரியாததால், நாளை  ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். முன்னதாக ரம்ஜானையொட்டி இன்று  தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது பள்ளி கல்வித்துறை … Read more

காங்-மதசார்பற்ற ஜனதா தளம் பொது செயல் திட்டத்தை உருவாக்க திட்டம்!

மதசார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து பொது செயல்திட்டம் உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை  அமைத்துள்ளன. இக்குழுவில் இடம் பெற்ற துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, காங்கிரஸ் மாநில தலைவர் வேணுகோபால் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகிய 3 காங்கிரஸ் தலைவர்கள், முதலமைச்சர் குமாரசாமி, குன்வர் தனிஷ் அலி ஆகிய இரண்டு மதசார்பற்ற ஜனதா கட்சித் தலைவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான  பொதுசெயல் திட்டத்தை உருவாக்க உள்ளதாக  ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சித்தராமையா தெரிவித்தார். … Read more

60 நாள் மீன்பிடித் தடைக்காலம் தமிழகத்தில் முடிவடைந்தது!

இன்று அதிகாலை முதல்  தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை ஒட்டி விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கம் பெரும்பாலும் கோடைக் காலங்களில்தான் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு 1983ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தமிழக கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிவரை … Read more