தமிழகம் முழுவதும் 41 டிஎஸ்பி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

தமிழகம் முழுவதும் காவல் துறையில் உதவி ஆணையர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிகாரிகள் உட்பட 41 பேருக்கு ADSP பதவி உயர்வை தமிழக அரசு வழங்கியுள்ளது. பதவி உயர்வு பெரும் காவல் துறையினர் அனைவரும் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்து தொடர்ந்து கேட்டகிரி 1 எனப்படும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பணியில் பணிபுரிந்து தற்போது காவல் உதவி கண்காணிப்பாளராக பணியில் இருப்பவர்கள். இவர்களுக்கான பதவி உயர்வு குறித்து,தமிழக டிஜிபி ராஜேந்திரன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பதவி … Read more

22 டிஎஸ்பிக்களை தூக்கி அடித்த டிஜிபி…!!கலக்கத்தில் காவல்…!!

தமிழகம் முழுதும் சென்னை உட்பட 22 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.  பெண்களுக்கான குற்றத்தடுப்பு மதுரை டிஎஸ்பி மகேந்திரன் மதுராந்தகம் சப் டிவிசன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.  தர்மபுரி குற்ற ஆவணகாப்பக டிஎஸ்பி சுப்பையா சத்தியமங்கலம் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.  திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கங்காதரன் திருவள்ளூர் சப் டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விஸ்வநாத் ஜெயின் தரமணி உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். … Read more

” பம்மும் எடப்பாடி அரசு “டெண்டர் முறைகேடா..? TTV அதிரடி…!!

குட்கா ஊழல் புகாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிஜிபியும் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என, ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழல் புகார் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திவந்த விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாமல், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உட்பட … Read more

தமிழக காவல்துறையை என்ன சொல்ல சிக்குகிறார் DGP….!!

  குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவரும்நிலையில் தமிழக காவல்துறை டி.ஜி.பியான டி.கே.ராஜேந்திரனை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் குட்கா அதிபர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரிஇதில் அமைச்சர்  விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி ராஜேந்திரன் , முன்னாள் கமிஷனரான  ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகின்றனர் என்பது … Read more

தூத்துக்குடிஅரசு மருத்துவமனையில் டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆய்வு..!

தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த  டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களையும், சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி. ராஜேந்திரன், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இருதரப்பிடமும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி … Read more