நாலுகால் பிராணி எடப்பாடி…..தவழ்ந்து காலை வணங்கியது எதற்காக…? TTV கேள்வி எழுப்பியுள்ளார்…!!

நாலுகால் பிராணி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன் விமரசனம் செய்துள்ளார். தமிழக அரசையும் , தமிழக முதல்வரையும் விமர்சித்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமமுக துணை பொது செயலாளர் TTV.தினகரன் இன்று செய்தியாளர்களை  பொது தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் , கடந்த ஆண்டு கரூர் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது , இந்த ஆட்சியை துரோக ஆட்சி , எடுபுடி ஆட்சி என்று கூறியதற்கு என்மீது அரசு … Read more

நலத்திட்ட உதவிகளை தடுக்கும் கட்சி திமுக…முதல்வர் விமர்சனம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்துவிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கள்ளிக்குடியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழக முதல்வர் கூறுகையில் , திமுக கட்சியினர் மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தங்களை மட்டும் சிந்திக்கும் கட்சி தான்  திமுக. ஆனால் அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி ,  நான் உட்பட இங்கே இருக்கும் அனைவரும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.எனவே எங்களுக்கு … Read more

மேச்சேரியில் தக்காளி கிடங்கு…முதல்வர் உறுதி…!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரியில் தக்காளி அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.ஆண்டுக்கு சுமார் 16,000 டன் தக்காளியை விவசாயிகள்  அறுவடை செய்கின்றனர். இங்கு விலையும் தக்காளி  சென்னை, மதுரை, கோவை, கேரளா ,  பெங்களூரு உள்ளிட்ட பல பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.இந்நிலையில் மேச்சேரி விவசாயிகளின் கோரிக்கையான தக்காளி குளிர் பதன பாதுகாப்பு கிடங்கு அமைப்பது.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் தக்காளி குளிர் பதன கிடங்கு விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்..!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், வரும் 7-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட இருக்கிறது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு, பச்சை நிற குடும்ப அட்டைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. … Read more

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முதலமைச்சர் ரூ.75 லட்சம் நிதி…

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். சென்னையில் வரும் 13ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை இந்தோ சினி அப்பிரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச்செயலாளர் தங்கராஜ் சந்தித்து பேசினார். இதனையடுத்து அவரிடம் முதலமைச்சர் பழனிசாமி 75 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். கடந்த ஆண்டுகளில் சென்னை சர்வதேச … Read more

அ.தி.மு.க.வுக்கு வாரிசு அரசியல் கிடையாது…முதல்வர் திட்டவட்டம்…!!

அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பதே இல்லை என்றும் தொண்டர்களே வாரிசு என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி பேசினார். அதன்பின் அவர் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் என்னதான் விரட்டினாலும் ஒன்றும் நடக்க  போவது இல்லை.  தி.மு.க. ஆள் வைத்து உழைக்கிற கட்சி.  அ.தி.மு.க. சொந்தமுடன் உழைக்கின்ற கட்சி. தி.மு.க. தலைவராக கருணாநிதி இருந்தபொழுதே அ.தி.மு.க. ஆட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  மக்களை ஏமாற்றும் கட்சிகள் இனி ஆட்சிக்கு வர முடியாது என்று அவர் பேசினார். DINASUVADU 

"அசத்திய எடப்பாடி" வேலைவாய்ப்பில் முன்னுரிமை : 3 சதவீதமாக உயர்வு

வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். வேலைவாய்ப்புகளில், விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி, அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை – நேரு உள் விளையாட்டு அரங்கில் … Read more

"ரூ 33,00,00,000 செலவு 1 கிலோ மீட்டருக்கு" EPS மிகவும் நேர்மையானவர் ,பொன்னையன் பேட்டி..!!

‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் நேர்மையானவர்’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஆன்லைன் டென்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஆர்.டி.ஜி.எஸ்.முறையில் பணம் செலுத்தும் ஆன்லைன் டென்டர் ஒப்பந்த முறையை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். ஒட்டன்சத்திரம் – அவிநாசி சாலைக்கான டென்டர் முறை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றதாகவும் … Read more

திமுக வைத்த செக் : "விழிபிதுங்கும் எடப்பாடி" சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு..!!

தமிழக முதல் அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இதை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சென்னை … Read more

ரூ 127,00,00,000 செலவில் வாங்கப்பட்ட 471 பேருந்துகளை முதல்வர் தொடங்கிவைத்தார்…!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 127 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 471 புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலாக வளாகத்தில் தொடக்கி வைத்தார்.இந்த பேருந்துகள் அனைத்தும் இன்றுமுதல் சேவை தொடங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DINASUVADU