தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு! 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? டிச.3ல் ரிசல்ட்…

5 state election

நாட்டில் சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது. இன்று, தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணியுடன் நேரம் முடிவடைந்தது. இன்று காலை முதல் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில், … Read more

கருத்துக்கணிப்பு எப்படி இருந்தாலும் மீண்டும் காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரும்.. முதல்வர் அசோக் கெலாட் உறுதி!

Ashok Gehlot

நாட்டில் 5 மாநில சட்டப்பேரவையில் பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில், தெலுங்கனாவில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநிலங்களிலும் பாஜக காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநில தேர்தலின் முடிவு … Read more

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

SS Rajamouli - Chiranjeevi - Allu Arjun

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று (நவம்பர் 30) தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியுள்ளது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பதட்டமான தொகுதிகள் என கணக்கிடப்பட்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 3.66 கோடி வாக்காளர்கள் உள்ள தெலுங்கானாவில், 119 … Read more

தெலுங்கானா தேர்தல் : அனல் பரந்த இறுதிக்கட்ட பிரச்சாரம்.! நாளை மறுநாள் மக்கள் தீர்ப்பு.!

Telangana Election 2023

இம்மாதம் அறிவிக்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதம் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 30இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119  தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர … Read more

காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே ரகசிய புரிதல்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!

amit shah

தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபைகளுக்கான தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரி சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டியை தெலுங்கானா தேர்தல் களம் எதிர்கொள்கிறது. தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி சந்திரசேகர ராவ் ஹாட்ரிக் அடிப்பாரா? என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவின் ஆளுமை, 9 ஆண்டு கால ஆட்சியின் நலத்திட்டங்களை முன்வைத்து … Read more

சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.! 

NCW Member Khushbu

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான்  ஒரு  தனியார் செய்தி நேர்காணலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டு இருந்தார். அப்போது ஒரு பதிவில் என்னால் சேரி மொழியில் பேச முடியாது என குறிப்பிட்டு இருந்தார். குஷ்பூ கூறிய இந்த வார்த்தைகள் தமிழகத்தில் பேசு பொருளாக மாறியது. … Read more

தமிழக ஆளுநர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -ம் கே.எஸ்.அழகிரி

ksalagiri

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,  உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எல்லை மீறுகின்ற ஆளுநர்களின் தலையில் ஒரு குட்டு வைத்துள்ளது. ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ரவி முன்பே இதை தெரிந்து வைத்திருக்கலாம். அல்லாது இவர் தெரிந்தும் தெரியாதது போல நடித்திருக்கலாம் என சந்தேகம் … Read more

பாஜக வேட்பாளர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் கடும் விமர்சனம் !

p chidambaram

விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றங்களில் வாதிட தேவை இருக்காது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருப்பதால், அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் தான் வெற்றி … Read more

காங்கிரஸ் vs பாஜக : ராஜஸ்தானில் தொடங்கியது விறுவிறு வாக்குப்பதிவு.! 

Rajasthan Assembly election 2023

இந்திய தேர்தல் ஆணையம் இம்மாதம் நடைபெறும் என அறிவித்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், இன்று ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணி வரை மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 73 தொகுதிகள் … Read more

மீண்டும் சிக்குகிறாரா ராகுல் காந்தி? தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! 2 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு!

rahul gandhi

பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர். அந்தவகையில் ராஜஸ்தானில் நேற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். இதில், … Read more