பாஜக வேட்பாளர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. முன்னாள் அமைச்சர் பா.சிதம்பரம் கடும் விமர்சனம் !

விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றங்களில் வாதிட தேவை இருக்காது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருப்பதால், அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

இம்முறை ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி உள்ளது. உள்ளார். மறுபக்கம் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் தெலுங்கனா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. இதனால், மும்முனை போட்டி நிலவினாலும், பி.ஆர்.எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி என கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது.

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்… என்னென்ன ஆவணங்கள் தேவை?

எனவே, தேர்தலுக்கான அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தோல்வி பயம் பாஜகவுக்கு வந்துவிட்டது, இதனால் விசாரணை அமைப்புகளை அனுப்பி மிரட்டி பார்க்கிறது என குற்றசாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது, நீதிமன்றத்தில் வாதிட தேவை இருக்காது.

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல.! அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி.!

தெலுங்கனாவில் தேர்தல் பரப்புரைகளுக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 பேர் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. இந்த நன்கு பெருகும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பாஜகவின் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக இருந்து நவம்பர் 1ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகியவர்.

எனக்கு தெரிந்த வரையில், பாஜகவின் எந்த வேட்பாளரும் விசாரணை அமைப்புகளால் தேடப்படவில்லை. பாஜகவின் அனைத்து வேட்பாளர்களும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படையானது. பாஜக தேர்ந்தெடுக்கப்பட்டால், அக்கட்சி தெலுங்கானா மக்களை நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் என விமர்சித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்