தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

SS Rajamouli - Chiranjeevi - Allu Arjun

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று (நவம்பர் 30) தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் தொடங்கியுள்ளது. 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பதட்டமான தொகுதிகள் என கணக்கிடப்பட்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

மொத்தமுள்ள 3.66 கோடி வாக்காளர்கள் உள்ள தெலுங்கானாவில், 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் பிஆர்எஸ் கட்சி 119 தொகுதிகளிலும், பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணி முறையே 111 மற்றும் 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையே 118 மற்றும் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் – பிரதமர் மோடி ட்வீட்..!

காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான சந்திர சேகர ராவின்  மகள் கே.கவிதா வாக்களித்தார். தெலுங்கானா அமைச்சரும், பிஆர்எஸ் எம்எல்ஏவும், முதல்வர் கேசிஆர் மகனுமாகிய கே.டி.ராமராவ் மற்றும் அவரது மனைவி ஷைலிமா, பஞ்சாரா ஹில்ஸ் நந்தி நகரில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தனர்.

ஐதராபாத்தில் AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி வாக்களித்தார். நடிகர் வெங்கடேஷ் டகுபதி, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநகர் தொகுதியில் உள்ள ஹைதராபாத் பிரசிடென்சி கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்க ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வாக்களித்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி வேட்பாளருமான முகமது அசாருதீன் ஹைதராபாத்தில் வாக்களித்தார். நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள பி ஓபுல் ரெட்டி பப்ளிக் பள்ளியில் வாக்களித்தனர். ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் நடிகர் அல்லு அர்ஜுன் வாக்களித்தார். ஹைதிராபாத்தில் இயக்குனர் எஸ்எஸ்.ராஜமௌலி வாக்களித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube